உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் - 10

இனிப், பண்டைக்காலத்துச் செந்தமிழ்ப்புலவர் தமது தமிழ்மொழியை ஆழ்ந்து கற்றது, அதுகொண்டு பொருள் ஈட்டுதற்குமட்டும் அன்று; அரசியலில் உயர்ந்த நிலைமைகளைப் பெறுதற்கும் அன்று. உலக இயற்கை மக்களியற்கைகளில் ஆழ்ந்து மறைந்தும் மேன்மிதந்து விளங்கியும் உள்ள அரும்பொருள்கள் நுட்பங்கள் அழகுகளையெல்லாம் ஒருங்கினி தறிந்து, அவ்வாற்றால் தமது அறியாமை நீங்கி அறிவு விளங்கி மேன்மேற் பெருகும் இன்பத்திற் றிளைத்தற்கேயாம். ஆகவே, அக் காலத்தில் அரசர் முதல் ஏழையெளியவர் ஈறான எல்லாருந் தமிழறிவு நிரப்புதலிற் பெருவிழைவும் பெருமுயற்சியும் முனைந்தவராயிருந்தனர்; அக் காலத்தில் ஆண்பாலா ரயன்றிப் பெண்பாலாருந் தமிழ்ப் புலமையில் தலைசிறந்து நின்றனர்; அக் காலத்தில் இன்ன சாதியார் கற்கலாம்; இன்ன சாதியார் கற்கலாகாது என்னும் வரையறை சிறிதுமே யிருந்திலது; அக் காலத்திற் பிறப்புக்காவது குலத்திற்காவது குடிக்காவது செல்வத்திற்காவது நிலைக்காவது உயர்வு கொடாமற் கல்விக்குங் கற்றவர்க்குமே உயர்வு கொடுத்து வந்தனர்; அக்காலத்திற் கற்றவர்கள், அரசராயிருப்பினும் எளியராயிருப் பினும், உயர்குலத்தவராயினும் உயர்வில் குலத்தவராயினும், உயர்வில் நிலைலிருப்பினும்,

உயர்நிலையிலிருப்பினும்

L

அவைபற்றி உயர்த்தப்படுதலுந் தாழ்த்தப்படுதலும் இன்றி, ஏதொரு வேற்றுமையும் இன்றி எல்லாராலும் பாராட்டப்பட்டு வாழ்ந்தனர். இத் தன்மைத்தாகிய பழைய புலவர் நிலையினை, ஆ ரியப்படை கடந்த மன்னர்பெருமானாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் பாடிய,

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்பு ஒரன்ன உடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது, அவருள் அறிவுடை யோன்ஆறு அரசுஞ் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/75&oldid=1579697" இலிருந்து மீள்விக்கப்பட்டது