உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

49

இயலாமையாலும் மரக்கலங் கவிழ்ந்து வீழ்ந்த ஊமையர் தப்புதல் அரிதேயாம்; என்றாலும், அது கவிழ்ந்தது பகற்காலமாயிற் கிட்டவோ எட்டவோ இருப்பவர் அவரது நிலையினைக் கண்டு டு இரங்கி நீந்திவந்து அவரைக் ககொடுத்தெடுத்துத் தப்புவித்தலும் ஒரோவழிக் கைகூடினுங் கூடும். ஆனால், அது கவிழ்ந்தது இரவு காலமாயின் அவ்வூமை யரின் நிலையைக் கண்டு பிறர் அருகுவந்து அவர்க்குதவி செய்தல் இயலாது; இன்னும், நிலவொளி விளங்கும் இராக்கால மாயிற் பிறர் அவர்பால் வந்து உதவி செய்தல் ரோவழிக் கூடினுங் கூடும்: மற்று, நிலவொளியும் மறைபட்ட மழைக் காலத் திராப்பொழுதானாலோ, கடலிற் றத்தளிக்கும் அவ்வூமையரின் நிலையை அயலவர் கண்டு இறங்கி வந்து அவர்க்குதவி

புரிதல் எவ்வாற்றானும் இயலாது. இயலாதாகவே, ஒரு சிறு துணையும் அற்றுத், தாம் தம் உயிர் இழத்தலைத் திண்ணமாய் உணர்ந்த கண்இல் ஊமர் கடற்பட்ட துன்பத்தின் மிகுதி உணருந்தோறும் உணருந்தோறும் மிகவுந் திகில் கொள்ளத்தக்கதாய் அளவிடப்படாததாயிருத்தல் உணர்வொருங்கிப் பார்ப்பார் எவர்க்கும் நன்கு விளங்கற் பாலதேயாம் இன்னும், மரக்கலம் உடைந்த தென்னாமற், கவிழ்ந்த தென்ற நுட்பத்தினை ஓருங்கால், மலைகளிற் றாக்கி அஃது உடைந்ததாயின் உடைந்த அதன் துண்டு ஒன்றனை அவ்வூமன் தானே பற்றிக்கொண்டு தப்புதலுங் கூடும்; மற்று உடையாமற் கவிழ்ந்த மரக்கலத்தைக் கொண்டோ அவ்வாறு தப்புதல் ஒரு சிறிதும் ஏலாதென்பது ஆசிரியர் அறிய வைத்தமை புலனாம். தமது வாழ்நாளெல்லாந் தம்மையுஞ் தஞ்

சுற்றத்தாரையும் வைத்து நன்கு பாதுகாத்துப் போந்த வள்ளற் பெருந்தகையான வெளிமான் இறந்துபட்டமையால், தாமுந் தஞ்சுற்றமும் ஏதொரு பற்றுக்கோடுங் காணாது இறந்துபடும் நிலையில் அலமரும் அவ் வியல்வினை ஆசிரியர் பெருஞ் சித்திரனார், கண்ணில் ஊமன் மாரியிரவிற் கடற்பட்ட நிகழ்ச்சிக் கண் வைத்துப் புலப்படுத்திய நுட்பமுந் திறனும் ஆராயுந் தோறும் பெருவியப்பினைத் தருகின்றன; ஈதன்றோ நல்லிசைப் புலமை! ஈதன்றோ தம்முள்ளத்துறு காணாநிகழ்ச்சியினைப் பிறர்க்குக் காட்டுமாறு! அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/74&oldid=1579696" இலிருந்து மீள்விக்கப்பட்டது