உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

❖ LDMMLDMELD- 10 மறைமலையம்

L

மேலும் ஆற்றாராகின்றார் பெருஞ்சித்திரனார்; ஏனென்றால், இவர் வெளிமானுழைப்பெற்ற பெரும்பொருளை யெல்லாம் வறுமைப்பட்ட தம் சுற்றத்தவர்க்கே கொடுத்து உதவிசெய்து வந்தாரென்பது, மேலெடுத்துக்காட்டிய “நின் நயந்துறை நர்க்கும் என்னுஞ் செய்யுளால் நன்கு விளங்குதலால் வெளிமானது சாக்காட்டினைக் கேட்டு அச் சுற்றத்தார் ஆவி சோர்ந்து அயர்தல் திண்ணமேயாகலின், வெளிமான் தமக்குதவியாற்றியதைப் பின்னுந், தம் வழியே தம் ஏழைச் சுற்றத்திற் குதவியாற்றியதை முன்னும் வைத்து நினைந்து வருந்தும் இவ்வாசிரியரது அருள்நெஞ்சப் பான்மையினை உற்றுநோக்குங்கால் இவர் தாமுறு துயரினும் பிறருறு துயரையே பெரிதுநினையும் பெற்றியினரென்பது இனிது விளங்காநிற்கின்றது, மேலுங், கண்ணில்லாத ஊமையன் ஒருவன் தான் ஏறியிருந்த மரக்கலங் கவிழக் கடல் நீரில் அமிழ்ந்துங்காற்பட்ட துயரினை இவர் எடுத்துக் கூறுதலி லிருந்து, இவர் வெளிமான் இறந்துபட்டதனை ஆற்றாது எவ்வளவு துன்புற்றாரென்பது தெற்றெனப் புலனாகின்றது. ஊமைகளா யிருப்பவர்க்கு வாய் பேசுதல் இயலாமையுடன் காதுங் கேளாது; பிறர் பேசுவன கேளாமையாலும், பிறரொடு தாம் ஏதும் பேசுதல் கூடாமையாலும் அவர் படுந்துயர் இவ்வளவினதன்று; வாயுங் காதும் இல்லையாய் ஒழியினுங், கண்ணாவது இருந்தால், பிறர் கூறுவனவற்றை அவர் குறிகளாலாயினுங் கண்டு கொள்வர்; தாம் தெரிவிக்க வேண்டுவனவற்றையும் பிறர்க்குக் குறிக்களால் தெரிவிக்கமாட்டுவர். ஆனாற், கட்பார்வையும் ஒருங்கு இழந்த ஊமையர்களோ எவரையும் எதனையுங் காண்டலும் இயலாது, எவரொடு பேசுதலும் இயலாது, பிறர் கூறுவதைக் கேட்டலும் இயலாது, அத்தகைய தமக்குரியவ ருதவியை முழுதும் பெற்றே தமது வாழ்நாளைச் சொல்லொணாப் பெருந்துன்பத்திற் கழிக்க வேண்டியவராவர். இப் பெற்றியினரான கண்ணில் ஊமர் பகற்காலத்திலேயே கடலில் தாம் ஏறியிருந்த மரக்கலங்கவிழப் பெற்றால் அதனுள் அழுந்தாமற் றப்புதல் அரிது; ஏனெனில், அருகு மிதக்கும் தேனும் ஒரு மரத்துண்டத்தைப் பற்றிக்கொள்ளுமாறு எட்ட இருந்து கூவுவார் ஒலியைத் தம் செவி கேளாமையாலும், பிறரைத் தமக்கு உதவிசெய்யுமாறு கூவியழைத்தல் தம்மால்

ஊமர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/73&oldid=1579695" இலிருந்து மீள்விக்கப்பட்டது