உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

அவல மறுசுழி மறுகலின்

தவலே நன்றுமன்! தகுதியும் அதுவே!”

47

(புறநானூறு 238)

“பிணம் உள் இட்டுக் கவிழ்த்துப் புதைத்த சிவந்த சாடியின் குவிந்த முதுகின்மேல்இருந்த சிவந்த செவியினவான ஆண் கழுகும் பொகுவற் பறவையும் அஞ்சுதல் இல்லனவாய், வல்லாய்க் காக்கையுடனுங் கோட்டானுடனுங் கூடிக்கொண்டு, பேய்க் கூட்டத்தொடு தாம் வேண்டியவாறெல்லாம் நடமாடு சுடுகாட்டிற்போய்ச் சேர்ந்தனனே மறவர்க்குரிய நறவினை விரும்பும் வெளிமான்! அவனை யிழந்தமையாற் றம்முடைய கைகளிலுள்ள வளையலைக் கழித்து விட்ட அவன்றன் கற்புடை மகளிரைப்போலப் பழைய அழகு சோர்ந்து புலவோர் சுற்றமும் ஒளிமழுங்கின தொகுதியாய் உள்ள கொடைமுரசு போர் முரசுகளும் மேற்போர்த்த தோல் கிழிந்தன! செலுத்தும் பாகர் இல்லாமையால் மலைபோன்ற யானைகளுந் தம்முடைய கொம்புகளை இழந்தன! கொடிய வலிமையினையுடைய ய கூற்றுவன் பெரியதொரு சாக்காட்டினை உண்டுபண்ணின னேனும் என் அப்பனாகிய வெளிமான் ஆவது அதனைத் தப்பாமல் அதன் கண்ணே அகப்பட்டது ஏனோ அறிகிலேன்! ஐயோ! எளியேன் இத் துயரத்தைக் காணவோ வந்தேன்! என்னை யடைந்த என் சுற்றத்தார் இவ் வள்ளற் பெருமான் இறந்து பட்டமை அறிந்தால் என்ன துன்பம் உழப்பார்களோ! மழைகாலத்து இரவிலே ஒரு மரக்கலமானது கட கடலிற் கவிழ்ந்துவிட அதன்கண் இருந்த கண் இல்லாத ஊமையன் ஒருவன் பொறுத்தற்கரிய துன்பம் மிக்க நெஞ்சுடனே அக் கடலின்கண் அமிழ்ந்தாற் போல,எல்லையளந்தறியப் படாததும் அலையில்லாததுமான துன்பவெள்ளத்தின் சுழலிற் கிடந்து சுழன்றுவருந்துதலைக் காட்டினும் இறந்துபடுதலே நல்ல தாகும்! நமக்குத் தகுதியாவதும் அதுவேயாகும்!” என்பன இப் பாட்டிற் சொல்லப்பட்ட பொருளாகும்; இதன்கண் அடங்கிய கருத்துக்களின் நுட்பங்களை எடுத்துரைக்கப் புகுந்தால் இது விரியும்; என்றாலும், ஒன்றிரண்டு காட்டுதல்வேண்டும். வெளிமான் இறந்ததனாற்றமது நெஞ்சத்தே பெருகுந் துயரினைப் புலப்படுக்கின்றுழித் தம் சுற்றத்தார் அவன் இறந்தமையறிந்தால் எத்துணைப் பெருந்துயர் உழப்பரென்பதனை நினைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/72&oldid=1579694" இலிருந்து மீள்விக்கப்பட்டது