உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம் - 10

பொருட்சிறப்பை நாட்டுந் திறம்! தமக்கு வரும் பெரும் பொருளைக் கண்ட துணையானே தமது கல்வியையுந் தமது மானத்தையும் இழந்து, விழுமிய மக்கட்பிறவிக்கு ஆகாதன செய்யும் புலவர் எங்கே! தமது கைக்கெளிதாய்க் கிடைத்த பெரும்பொருளையும் பொருள் செயாது தமது கல்விப்பெருமையினையுந் தமது மானத்தினையுங் காத்த இப் புலவர் எங்கே!

இனி, இப் புலவர்பெருமான் பரிசில் வேண்டிச் சென்ற காலங்களிலெல்லாஞ் சிறிதும் மனங் கலையாது இவரது தகுதி யறிந்து இவர்க்குப் பெரும்பொருள் வழங்கி வந்த வெளிமான் என்னும் அரசன் இறந்துபட்டஞான்று, இவர் பெருந்துயரால் நெஞ்சம் பிளவுபட்டு நைந்து பாடிய செய்யுள் அவ்வரசனது வள்ளன்மையினையும், இவர் அவன் பால் வைத்திருந்த பருக்கையும் மறவாநன்றியையும் நன்கு புலப்படுத்துகின்றதாகலின், அதனையும் ஈண்டு எடுத்துக்காட்டி

அன்பின்

மேற்செல்வாம்.

“கவிசெந் தாழிக் குவியுறத் திருந்த

செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்குங் காடு முன்னினனே கட்கா முறுநன்! தொடிகழி மகளிரில் தொல்கவின் வாடிப் பாடுநர் கடும்பும் பையென் றனவே! தோடுகொள் முரசுங் கிழிந்தன கண்ணே!

ஆள்இல், வரைபோல் யானையும் மருப்பு இழந்தனவே! வெந்திறற் கூற்றம் பெரும்பே துறப்ப எந்தை யாகுதல் அதற்படல் அறியேன்! அந்தோ! அளியேன்! வந்தனென் மன்ற! என்ஆ குவர்கொல் என்துன்னி யோரே! மாரி இரவில் மரங்கவிழ் பொழுதின் ஆர்அஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக் கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரைஅளந் தறியாத் திரைஅரு நீத்தத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/71&oldid=1579693" இலிருந்து மீள்விக்கப்பட்டது