உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

நெடுநல் யானை எம் பரிசில்

கடுமான் தோன்றல் செல்வல் யானே”

45

என அவர் அருளிச்செய்த பாட்டின் ( புறநானூறு 162) திறனைக் காண்மின்! ஈயாது இவறிய அவ்வரசிளைஞனை ஒரு பொருட் படுத்தாது, அவன் வெட்குமாறு, ஈகையிற் சிறந்த குமண மன்னன்பாற் றாம் பெற்றுவந்த களிற்றியானையினை அவன் கண்முன்னே கொணர்ந்து காட்டி, உலகத்திற் பொருளாலுங் கல்வியாலும் மிக்கோங்கிப் புகழொடு பொலிவார் இயல்பினை அவன் அறியுமாறு துணிந்துகாட்டி, அவற்கு அறிவுதெருட்டிய பெருஞ் சித்திரனாரது உள்ள மாட்சியினை என்னென்பேம்! ஈதன்றோ நல்லிசைப் புலமை சான்ற நாவலர் திறமாகும்!

இன்னும், இவ்வாசிரியர் ஒருகால், வள்ளற்பெருந்தகை யாகிய அதியமான் நெடுமான்னஞ்சியுழைப் பரிசில் பெறற் பொருட்டுச் சென்றஞான்று, அவன் ஏதுகாரணத்தினாலோ இவரைக் கண்டு உரையாடுதற்குக் காலம்பெறனாய், இவரைக் காணாமலே இவரது தகுதிக்கேற்பப் பெரும்பொருளைப் பரிசிலாக ஒருவர் வழியே விடுத்து நல்கினான். ஆனாற், பெருஞ்சித்திரனரோ தம்மைத் தன்பால் அன்புடன் வருவித்து அளவளாவிப் பரிசில் கொடாமல், தம்மைக் காணாமலே அவன் பரிசிலாக விடுத்த அப் பெரும்பொருட்டிரளை ஏலாமல் வறுத்து, அவனுக்குப் பின்வருஞ் செய்யுளைக் குறித்து விடுத்தார்:

66

"குன்றும் மலையும் பலபின் ஒழிய

வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என நின்ற என் நயந் தருளி ஈதுகொண்டு

ஈங்கனஞ் செல்க தானென என்னை

யாங் கறிந்தனனோ தாங்கருங் காவலன்? காணாது ஈத்தஇப் பொருட்கு யான்ஓர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித் தினையனைத் தாயினும் இனிது அவர் துணையளவு அறிந்து நல்கினர் விடினே."

(புறநானூறு 208)

ஈதன்றோ உண்மைத்துறவுள்ளம்! ஈதன்றோ அழிந்து படுஞ் செல்வப் பொருண்முன் அழிந்துபடாக் கல்விப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/70&oldid=1579692" இலிருந்து மீள்விக்கப்பட்டது