உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

  • மறைமலையம் - 10

வைத்து வரைகடந்து புகழ்ந்து பேசுதலும், அவர் ஏவியன விரைந்து பணிந்து செய்தலும் வழக்கமாய்க் காணப்படு கின்றன. அங்ஙனமிருக்க, நம் புலவர் விளக்கான பெருஞ்சித்திரனாரோ, “மிகச் சிறந்த யானையையே பரிசிலாகப் பறுவதாயிருந்தாலும், முகம் மாறியுங் காலந்தாழ்த்துங் கொடுக்கும் அதனை யான் கொள்ளேன்; அவ்வாறின்றி மகிழ்ந்து நீ விரையக் கொடுத்திடுவது குன்றிமணி அனைய சிற்றளவினதா யிருந்தாலும் அதனை யான் ஏற்பேன்,” என அவ்வரசனை நோக்கி மொழிந்தனர்; ஈது அவரது உள்ளப் பெருமையினை இனிது காட்டுகின்றதன்றோ?

என்னும்

பின்னர் ஒருகாற் பெருஞ்சித்திரனார் பொருளுதவி பெறல்வேண்டி ஈகையிற் சிறந்த வெளிமான் அரசன்பாற் செல்ல, அவன் அந்நேரத்திற் றுயில் ஒழியா நிலையில் இருந்தமையால், தன் தம்பியை விளித்து அப்புலவர் பெருமானுக்குப் பரிசில் கொடு என ஏவ, அவன் கையிறுக்கம் உடையனாதலால், அவரது பெரும்புலமையின் அளவறிந்து நிரம்பக்கொடாது குறையப் பரிசில் கொடுப்ப, அவர் அதனை ஏற்றுக்கொள்ளாது மீண்டுங் குமணமன்னன் பால் ஏகி, அவன் கொடுத்த களிற்றியானையைக் கொணர்ந்து, வெளிமான் ஊர்க்காவல் மரத்திலே அதனைக் கட்டிவைத்து, வெளிமான் றம்பியிடம் போந்து, “நீ இரப்போரைப் பாதுகாப்பாயும் அல்லை; இரப்போரைப் பாதுகாப்பவர் இல்லாமற்போகவும் இல்லை; பெருந்தன்மை வாய்ந்த இரவலர் இருத்தலுங் காண்பாயாக! அவ்விரவலர்க்கு வேண்டியவளவு ஈவோர் இருத்தலுங் காண்பாயாக! நின் ஊர்க் காவன் மரத்திலே யாம் கொணர்ந்து பிணித்த சிறந்த யானையானது யாம் பெற்ற பரிசிலாகும்; அரசிளைஞனே! யான் போவேன்" என்னும் பொருள் அடக்கி,

'இரவலர் புரவலை நீயும் அல்லை;

புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; இரவலர் உண்மையுங்காண்! இனி இரவலர்க்கு ஈவோர் உண்மையுங்காண்! இனி நின் ஊர்க் கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/69&oldid=1579691" இலிருந்து மீள்விக்கப்பட்டது