உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

43

ஆற்றொணா வறுமையிற் கிடந்து நைந்தவர் மீண்டுஞ் செல்வம் பெற்றால், அச் செல்வத்தின் அருமையுணர்ந்து அதனைத் தமக்கெனவே வரைந்து வைத்துக் கொள்வ ரல்லது, அதிற் கடுகளவுதானும் பிறர்க்குக் கொடுக்க மனம் ஒருப்படார்; என்னை? அவர் தமது துன்பத்தையே பெரிதாக நினைப்பதன்றிப் பிறர்படுதுயரைச் சிறிதும் நினைப்பதில்லையாகலின். ஆனால், நம் நல்லிசைப் பெரும் புலவரான பெருஞ்சித்திரனாரோ தாம் வறுமையிற்பட்ட துன்பத்தின் கொடுமையை நினைந்த போதெல்லாம், வறுமையிற்பட்ட பிறரது துன்பத்தையும் உட ன்நினைந்து, அதனாற் றமது துயரினையும் மறந்தவராய்ப் பிறர்துயர்களைவதிலேயே கருத்து முனைந்து நின்றார். இவ்வாறு பிறர் துயர் நினைந்து நெக்குருகும் நெஞ்சம் வாய்ந்தாரே பெறற்கரிய கல்வியாற் பெறும்பேறு பெற்றாராவர்.

இனிப், பொறுத்தற்கரிய வறுமையிலுந் துன்பத்திலுங் கிடந்து உழன்றவழியும் புலமையின் மிக்க சான்றோர் தமது நிலைக்காகாதனவும் இழிதக்கனவுஞ் செய்யார் என்பதூஉம், ஆசிரியர் பெருஞ்சித்திரனாரது ஒழுகலாற்றால் நன்கு விளங்கா நிற்கின்றது. இவர் தமது வறுமையை நீக்கிக் கொளல்வேண்டிக் குமணவேந்தன்பாற் சென்ற காலத்து, அவன் எதனாலோ பரிசு

கொடுத்தலிற் சிறிது காலந்தாழ்ப்ப,

இவர்

தமது

உள்ளமேம்பாடு அவனுக்கு அறிவுறுத்துவாராய்ச் சிறிதும் அஞ்சாமல்,

“உயர்ந்துஏந்து மருப்பிற் கொல்களிறு பெறினுந் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென், உவந்துநீ இன்புற விடுதி யாயிற், சிறிது

குன்றியுங் கொள்வல் கூர்வேற் குமண!'

என்று கூறிய செய்யும் (புறநானூறு 159) எத்துணை விழுமிதாய் உயர்ந்தோங்கித் துலங்குகின்றது! பொருளுடை யார்பால் அவர்தரும் பொருளை நச்சிச் சென்றவர், அவர் மகிழ்ந்திருக்குங் காலம் பார்த்து அவரது தலைவாயிலிலே அடங்கி யொடுங்கிக் காத்துக்கிடத்தலும், அவர் அவர் முன்னிலையிற் சன்றால் அவரிடத்தில்லாத குணங்களை யெடுத்து இருப்பனவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/68&oldid=1579690" இலிருந்து மீள்விக்கப்பட்டது