உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

❖ LDMMLDMELD-10 மறைமலையம்

இத்துணை யிடர்ப்பாடான நிலையிலிருந்தும் பெருஞ் சித்திரனார் தாம் குமணவேந்தன்பாற் பெற்ற பெரும் பொருட்டிரளைத் தமக்கென்றுந் தம் மனைவி மக்கட்கென்றும் வரைந்து வைத்துக்கொண்டு கையிறுக்கமாய் இராது, அதனைத் தம் மனைவியார் கையிற்கொடுத்து,

‘நின்நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் பன்மாண் கற்பின் நின்கிளை முதலோர்க்குங்

கடும்பின் கடும்பசி தீர யாழநின்

நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னெடுஞ் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லார்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேற் குமணன் நல்கிய வளனே'

(புறநானூறு 163)

என்று அவர் இசைத்த அரும்பெருஞ் செய்யுளால் அப்புலவர் பெருந்தகையின் பேரருட்டிறத்தை அறிந்து மகிழ்மின்கள்! இதன்கண், “நின்பால் அன்புபூண்டு நின்னைச் சார்ந்திருக்கும் மகளிர்க்கும், நின்னால் அன்புசெய்யப்பட்ட மகளிர்க்கும், பல நற்குணங்களிலுஞ் சிறந்து மூத்துப்போன நின் முதிய மாதர்க்கும், நின் மிடிப்பட்ட சுற்றத்தாரின் கொடும்பசி நீங்குமாறு கொடுத்ததை நீ திருப்பிக் கொடுப்பாய் என எதிர்பார்த்துத் கொடுத்து உதவி செய்தார்க்கும், இன்னார்க்குக் கொடுப்போம் இன்னார்க்குக் கொடோம் எனக் கருதாமலும், என்னோடும் ஆராயாமலும், இனித் திறவிதாக வாழக்கடவேம் என எண்ணாமலும், யான் கொடுப்பதோடுகூட நீயும் எல்லார்க்குங் கொடுப்பாயாக என் மனைவியே, பல்வகைப் பழங்களுந் தொங்காநின்ற மரங்களையுடைய முதிரம் என்னும் மலைக்குத் தலைவனான திருந்துவேல் ஏந்து குமணன் எனக்கு வழங்கிய செல்வத்தை” என்று அவ்வாசிரியர் தம் மனைவியார்க்கு அறிவுறுத்திய அறிவுரையானது எத்து ண மேம்பாடு வாய்ந்ததாய்த் திகழ்கின்றது! இதனால் அப் புலவர்பெருமான் தனக்கென வாழா அருளமுது பொதிந்து பொங்குந் திருவுள்ளம் பொருந்தியவராதல் பொள்ளெனப் புலனாகின்றதன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/67&oldid=1579689" இலிருந்து மீள்விக்கப்பட்டது