உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

41

இல்லாமை கண்டு அழுதனனாக, அவன் அன்னை ‘அதோ புலி வருகிறது!' எனச் சொல்லி அச்சுறுத்தியும், 'உதோ அம்புலியைப் பார்! என நாப்புக் காட்டியும் அப்புதல்வன் அழுகை தீராமையின் அதற்கு உளம் நொந்தனளாய் ‘நினது வாடிய நிலையை நின் தந்தைக்குக் காட்டு' எனக் கூறி, அவனைப் பலவுஞ் சொல்லிக் கேட்ட படியாய் நனவின் கண்ணும் என் மனைவி பெருந்துயர் உழவாநின்றாள் என அவர் குமண வேந்தனை நோக்கிப் பாடிய,

“இல்உணாத் துறத்தலின் இல்மறந்து உறையும் புல்உளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பால்இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் கூழுஞ்சோறுங் கடைஇ ஊழின்

உள்இல் வறுங்கலந் திறந்து அழக்கண்டு

மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும் நொந்தன ளாகி நுந்தையை உள்ளிப் பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும்

வினவல் ஆனாள் ஆகி நனவின்

அல்லல் உழப்போள்.”

என்னுஞ் செய்யுள் (புறநானூறு, 160) கன்னெஞ்சமுங்கரைய அவரது மிடிப்பட்ட வாழ்க்கை நிலையினை எடுத்துரைத்தல்

காண்க.

இன்றைநாளிற் போல நூல் எழுதிப் பரப்புதற்குரிய கடிதம் அச்சுப்பொறி முதலிய கருவிகளும், போக்குவரவுக்கேற்ற புகைவண்டிகளுங் கடிதப் போக்குவரவுக்கு இடனான செய்தி நிலையங்களுங், கல்வியறிவூட்டுங் கல்லூரிகளும் பண்டை நாளில் இல்லாமையிற், பழந்தமிழ்ப் புலவோரிற் பெரும்பாலார் தாங் கற்ற பெருங் கல்வியைப் பிறர்க்குப் பயன்படுத்தவும், அதனாற் றம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் பெற்று இனிது வாழவும் இயலாதவராய், ஈகையிற் சிறந்த அரசரையுஞ் சல்வரையுந் தேடிச்சென்று அவர் வழங்கிய பொ ாருள் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டிய ய இடர்ப்பாடான நிலையில் இருந்தனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/66&oldid=1579688" இலிருந்து மீள்விக்கப்பட்டது