உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

7. பொருளற வொழுக்கம்

னி, ஓர் ஆண்மகனும் அவன்றன்

மனையாளும்

அங்ஙனம் மாறாக் காதலன் பிற்பிணைந்து இல்வாழ்க்கையினை நடாத்து கின்றுழி, அதன்கட் பல்வகை யிடையூறுகளுந் துன்பங்களும் புகுந்து நிலைகலக்கினும், இருவரும் அவற்றைப் பொறுத்து, ஒருவர்மேல் ஒருவர் வருந்தாராய்ப் பண்டுபோல் அன்பில் மிகுந்து முயற்சியிற் றாழாராய்த் தங்கடமைகளை வழுவின்றி உவப்புடன் செய்குவர். வறுமையுந் துன்பமும் நீங்கி வளம்பெற்ற காலையிலும் அவர் தம் நிலையிற் றிரியாராய் எல்லார்க்கும் இனியன சய்தே ஒழுகா நிற்பர். இப் பெற்றித்தாகிய சிறந்த இல்வாழ்க்கையினை நம் பண்டைத் தமிழ்ப்புலவர் தாமே வாழ்ந்து காட்டினமை பெரிதும் பாராட்டற்பாலதாகும். இதற்குப், பழந்தமிழ்ப் புலவர் பெருந்தகையாகிய பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கை

வரலாற்றினை ஈண்டொரு சிறிது எடுத்துக்காட்டுதும்.

.

பெருஞ்சித்திரனார் என்னும் ஆசிரியர் ஒருகாலத்தில் மிகவும் மிடிப்பட்ட வாழ்க்கையில் இருந்தார். இவரது இல்லத்தின் அடுக்களையில் உணவுப் பண்டங்களே இல்லாது போனமையால், ஒருநாள் இவர்தம் மனைவியார் அதனுள்ளே செல்லாமல் அதனை மறந்து வருந்தியொருபக்கத்தே ஒடுங்கி யிருக்க, அவர் தஞ்சிறுபுதல்வன் நல்லுணவில்லாமையின் உதிர்ந்து சிற்சில மயிர்களே முளைத்து அழகு குறைத் தலையின் தோற்றம் வாய்ந்தவனாய், அங்ஙனம் ஒடுங்கியிருக்குந் தன் அன்னையின் பால் இல்லாத வெறுமுலையைச் சுவைத்துச் சுவைத்துப் பார்த்தும் அதிலிருந்து தினைத்தனைப் பாலும் பெறாமையிற், கூழுஞ்சோறுமாதல் பெறுவான் வேண்டி அவ் வடுக்களையுள் நுழைந்து, அகத்தே ஒன்றும் இல்லாத வெறும் பாண்டங்களை ஒவ்வொன்றாகத் திறந்துபார்க்க அங்கொன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/65&oldid=1579687" இலிருந்து மீள்விக்கப்பட்டது