உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் அவர்ப்புறங் காணேன் ஆயிற் சிறந்த பேரமர் உண்கன் இவளினும் பிரிக!”

39

(புறநானூறு, 71)

என்று அவன் அப்போது பாடிய அருந்தமிழ்ச் செய்யுளால் அறிகின்றேம். இவன் தன் மனையாளைத் தன் ஆருயிரெனக் கொண்டொழுகியவாறு போலவே, இவன்றன் மனையாளான பருங்கோப்பெண்டும் இவனைத் தன் இன்னுயிராய்க் காதலித்து, அவன் இறந்துபட்டஞான்று அவனைப் பிரிந்து உயிர்வாழமாட்டாளாய்த் தீப்பாய முனைந்துழி, அருகிருந்த சான்றோர் அவளைத் தடுத்தும், அவள் அவரை நோக்கிப்,

“பல் சான்றீரே! பல் சான்றீரே!

செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ!

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்கரி தாகுக தில்ல, எமக்கு எம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை

நள்ளிரும் பொய்கையுஞ் தீயும் ஓரற்றே”

(புறநானூறு. 246)

என்று இவ்வருமருந்தன்ன செய்யுளைச் சொல்லித், தீப்பாய்ந்து உயிர்நீத்தனள். கல்வியிலும் அரச வாழ்க்கையிலும் நிகரின்றிக் கலித்த இவ்விருவரும் ஒருவரையொருவர் பிரியலாற்றாது மாய்ந்த காதற் கற்பின் மாட்சியினை யுள்ளுதொறும் உள்ளம் உருகாதார் யார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/64&oldid=1579686" இலிருந்து மீள்விக்கப்பட்டது