உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

38

மறைமலையம் 10

காணாதவனோயாயினான்;

என்றாலுஞ்

செவிலித்தாய் வினாவியதில் ஓர் ஆண்மகனேயன்றி ஒரு பெண்மகளுங் குறிப்பிடப்பட்டமையால், தான் காணாத அப் பெண்மகளைத் தன் மனையாளே கண்டிருக்கவேண்டுமெனக் கருதி, அவளை அக் குறிப்புக்கு விடைதருமாறு ஏவின நுட்பம் பெரிதும் வியக்கற்பாலதாகும். இன்னும் செவிலித்தாய் கேட்ட அவ் வினாவுக்கு, அவ் விளைஞன் முதலில் விடையுரை பகர்ந்த நுட்பத்தினை ஒருங்கால், அவன்றன் மனையாள் அவன்மேற் பெருங்காதல் பூண்ட ஒழுக்கத்தினளாகலின் அவளுந் தன் கணவனை யன்றித் தம்மெதிரே சென்ற அவ் வாண்மகன் பிறனொருவன் உருவினை நினைந்திற்றிலள்; அதனால், அவள் அவன் பக்கத்தே போய பெண்மகளை மட்டும் நோக்கினாளா கற்பாலள் என்பதூஉம் போதரா நிற்கும். எடுக்குந்தோறுங் குறையாத் தெய்வக் கருவூலம் போல், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த இத் திருப்பாட்டு இங்ஙனம் எடுக்க எடுக்கக் குறையாப் பொருளாழம் வாய்ந்து, ஈருடம்பின் ஓருயிராய்த் திகழுங் கணவன் மனைவியரின் காதற்பெருங் கிழமையினையும் அதனால் அவர்க்கு நிலைபெற்ற கற்பொழுக்க விழுப்பத்தினையும் நன்கு தேற்றுமாறு கருத்திற் பதிக்கற் பாலதொன்றாம்.

வி

இங்ஙனம் ஈருடம்பின் ஓருயிராய் நிற்குங் காதலரின் கற்பியல் வாழ்க்கைக்கு, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும் அவன் மனைவி பெருங்கோப்பெண்டும் உறுபெருஞ் சான்றாய்த் திகழ்கின்றனர். இவர் இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாத அத்துணைக் காதற்பெருங்கேண்மை யுடையராய் விளங்கினமை, தமிழ்மொழிவல்ல இவர் இருவரும் பாடிய பாட்டுக்களால் நன்கு தெளியப்படுகின்றது. ஒருகால் இப் பாண்டிவேந்தன் தன்னை எதிர்க்க முனைந்த அரசர்களைத் தாக்கி வெற்றிபெறேனாயிற் காதற்கிழமையிற் சிறந்த என் மனைவியைப் பிரிந்தேன் ஆகுக! என்று வஞ்சினங் கூறியதை, “மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத் தடங்காத் தானை வேந்தர் உடங்கியைத் தென்னோடு பொருதும் என்ப, அவர ஆரமர் அலறத் தாக்கித் தேரோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/63&oldid=1579685" இலிருந்து மீள்விக்கப்பட்டது