உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண்டேன், அயலே

ச்

37

தூண்டா விளக்கனை யாய்! என்னை யோஅன்னை சொல்லியதே" என்னுந் திருச்சிற்றம்பலக் கோவையாரால் (244) தெளிவுறுத்தப் படுதல் காண்மின்கள்! இத் திருப்பாட்டிற் சொல்லப்படுவது இது; தன் மகள் தன்னாற் காதலிக்கப் பட்ட ஓர் ஆண்மகனை மணந்து கொள்ளுதற்பொருட்டு அவனுடனே கூடித், தன்னவர் எவரும் அறியாமே அவனூர்க்குப் போய்விட்டனள். அவள் அங்ஙனம் போயதை யறிந்த செவிலித்தாய், தன் மகளும் அவள் காதலனுங் கூடிச் சென்றவழியை அவருடைய அடிச்சுவடு களால் அறிந்து அவ் விருவரையுந் தேடிச் செல்லத், தனக்கெதிரே ஓர் இளைய அழகிய மங்கையும் அவள் கணவனும் வரக்கண்டு தான் மேலுஞ் செல்வதை நிறுத்தி நின்றாள். நிற்க. எதிர்வந்த அவ்விருவந் தன்னருகு புகுந்ததுந், "தம்மூர்க்குச் சென்ற என் மருமகனும் மகளுமே திரும்பி வருகின்றாரென நினைந்து நும்மைக் கண்டு மகிழ்ந்தேன்; ஆனால், நீவிர் வேறென்பது அணுகிவந்ததுந் தெரிந்தேன். நுங்களைப்போலவே எல்லாவகையிலுஞ் சிறந்தார் இருவர் நும்மை எதிர்ப்பட்டுச் செல்லக் கண்டீரோ? என அச் சவிலித்தாய் சொல்லி வினவ, அவ்விருவரில் ஆண்மகனாய் நின்றவன் அத் தாயை நோக்கி, “அன்னாய்! புலியூர்ச்சிற்றம் பலத்தே புலனாய் நின்று என்னை அடிமை காண்ட சிவபெருமானது மலைக்கண் உள்ள அரிமாவை யொத்தான் ஒர் ஆண்மகனை யான் கண்டேன்” என விடைகூறி, அதன் பிறகு, தன் பக்கத்தேநின்ற தன் மனையாளை நோக்கித், தூண்டாத மணிவிளக்கை யொத்த காதலி! யான் கண்ட அவ் வாண்மகன் பக்கத்தே வேறொன்றை இவ் வன்னை சொல்லினளே; அஃது யாது? அதனை அவட்கு அறிவிப்பாயாக!” என்று கூறித் தன் மனையாளை ஏவின பான்மையை உற்றுநோக்குமின்கள்! செவிலித்தாய் வினாவியதற்கு ஆளியன்னானைக் கண்டேன் என்றவன்,அவன்பக்கத்தே சென்ற அவன்றன் காதலியைத் தான் கண்டதாகக் கூறிற்றிலன்; ஏன்? அவன் தன்னுடன் போந்த காதலியைத் தன்னுயிராகக் கருதித் காதலன்பு கொண்டிருந் தானாகலின் அவன் தன் மனைவியின் உருவத்தையன்றிப் பிறள் ஒருத்தியைச் சிறிதும் நினைந்திலன் அதனால், எதிரே சென்ற ஆடவனையன்றி அவன்றன் காதலியை அவன் கண்டுங்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/62&oldid=1579684" இலிருந்து மீள்விக்கப்பட்டது