உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

முறையினாலேயே

மறைமலையம் 10

அவை தம்மைப் பெற்றுவருதலுங் காண்கின்றோம். இன்னும், இம் மக்களின் உறவுவாழ்க்கை யுள்ளும் ஆடவரும் மகளிருங், கணவரும் மனைவியருமாய் ஒருங்கு கூடி வாழும் வாழ்க்கையே அவர் இந்நிலவுலகில் இருக்குந் துணையும் நிலைபெற்றிருக்கும் நெருங்கிய நீண் வாழ்க்கையாய், மேலும் மேலும் உயிர்கள் பிறவிக்கு வருதற்கு ஏதுவாய், மக்கள் வாழ்க்கை யென்பதொன்று இம் மாநிலத்தில் நடைபெறுதற்கு அடிக்காரணமாய்ச் சிறந்து நிற்றலின் அத்துணைச் சிறப்பினதாகிய இல்வாழ்க்கையினையே நம் பண்டைப் பேராசிரியர் தாம் இயற்றிய நூல்களிலெல்லாஞ் சிறந்தெடுத்து, அதனைப் பலவாற்றானும் அழகுபடுத்துப் பாடியும் பேசியும் இருக்கின்றனர். ஒர் ஆண்மகனும் ஒரு பெண்மகளுங்கூடி நடாத்துவதாகிய அவ் வில்வாழ்க்கை மிக உயர்ந்த பேரன்பின்வழித்தாக நடைபெறுவதாமென்பதும், அவ் விருவர்க்குள் இயற்கையேயுண்டாம் அப்பேரன்புதான் ‘காதல்’ என்னும் பெயரால் வழங்கப்படுமென்பதும்,

66

'காதற் காமங் காமத்துச் சிறந்தது

விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி”

என்று பரிபாடலும் ()

“சொற்பா லமிழ்திவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானிவ ளாம்பகுதிப் பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பிற் கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே”

என்று திருச்சிற்றம்பலக் கோவையாரும் (8) நுவலுமாற்றால் தெளியப்படும். இப் பெற்றித்தான சிறந்த காதலன் பிற்பிணைப் புண்டவழி மனைவி தன் கணவனையன்றி ஆடவர் பிறரைக் கனவிலும் நினையாமையின் அவட்கே உண்மைக் கற்பொழுக்கம் நிலைபெறும்; அவள் கணவனும் அவளை யன்றி மகளிர் பிறரைக் கருதாமையின் அவற்கும் உள்ளம் உரன் அழியாதாய் நிற்கும். இவ்விருவரின் சிறந்த கற்பியல் நிலை,

"மீண்டா ரெனவுவந் தேன்கண்டு நும்மைஇம் மேதகவே பூண்டா ரிருவர் முன் போயின ரே? புலி யூரெனைநின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/61&oldid=1579683" இலிருந்து மீள்விக்கப்பட்டது