உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு

  • முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

35

லக்கு

இருத்தல் வேண்டுமெனவும், இங்கு வந்தபின் அவை அறிவும் இன்பமுஞ் சிறிதுசிறிதாகக் கைகூடப்பெறினும் அவை இரண்டும் முதிர்ந்த நிலைக்கு வரும் முன்னரே உயிர்கள் இதனைவிட்டு மறைந்தொழியக் காண்டலால், அரைகுறையாய்ப் பெற்ற அறிவு இன்பங்களுடனே அவ்வுயிர்கள் பிறவியை முற்றும் விட்டொழிதல் இசையாதெனவும், அறிவு இன்பங்களிரண்டும் சிறு குறையும் இல்லையாய் இல்லையாய் நிறைந்த நிலைக் வரும்வரையில் இந்தவுலகத்திலோ அல்லது இதனையொத்த வேறு உலகங்களிலோ அவை பற்பல பிறவிகளை யெடுக்கு மெனவும் உய்த்துணர்கின்றேம். எனவே, இப் பிறவியிற் காணப்படும் நிகழ்ச்சி கொண்டு இதனோடு தொடர்புடைய முற்பிறவி நிகழ்ச்சியும், இனித் தொடரும் பிற்பிறவி நிகழ்ச்சியுங் காணவல்ல அறிவு விலங்கினங்கட்கு இன்றி மக்களுயிர்க்கு மட்டுமே அமைந்திருத்தலால், மக்கள் வாழ்க்கையானது பகுத்தறிவு விளக்கத்தையும், அதன்வழியே இன்பப்பேற்றையுமே அவாவிநிற்றலும், அறிவு விளங்கப்பெறுவதெல்லாம் அறியாமைவாயிலாக வருந் துன்பங்களை நீக்கி இன்பத்தைப் பெறுதற்பொருட்டாகவே நிகழ்தலாற் பிறவி யெடுப்பதன் முடிந்தநோக்கம் மாறாப்பேரின்பப் பேறாகவே கடைக் கூடுதலுந் தாமே போதரும். இவையே பண்டை நந்தழிழாசிரியர் கண்ட முடிந்த வுண்மைகளும் ஆகும். இஃது ஆசிரியர் தொல்காப்பியனார்,

“எல்லா உயிர்க்கும் இன்பமென்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்"

(பொருளியல். 29)

என்று அருளிச்செய்தவாற்றானும், உறுதிப்பொருள்களைப் பிற்காலத்தார் அறம் பொருள் இன்பம் எனப் பாகுபடுத் தோதியதுபோலாது, அவர்

"இன்பமும் பொருளும் அறனும் என்றாங் கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்”

எனக் களவியல் முதற்கண் ஓதியவாற்றானுந் தெளியப்படும்

னி, அறிவும் இன்பமும் பெற்றுவரும் மக்கள் அவை தம்மைத் தாந் தனித்திருந்து பெறமாட்டாராய், ஒருவர் மற்றொருவரோடு ஒருங்குவாழும்

அளவளாவி

உறவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/60&oldid=1579682" இலிருந்து மீள்விக்கப்பட்டது