உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

6. பண்டைப்புலவர் முப்பால் ஒழுக்கம் ஓம்பினமை

இன்பவொழுக்கம்

66

இனி, முன்னிருந்த நம் ஆசிரியர் நமதருந்தமிழ் மொழியைப் பொருந்திக் காத்தமைபோலவே, அம்மொழியாற் குறிக்கப்படும் இன்பமும் பொருளும் அறனும் என்னும் முப்பாற் பொருளையும், அவை காரணமாக வரூஉம் மூவகை யொழுக்கங்களையும், உலகவியற்கை மக்களியற்கையொடு பொருந்தக் கண்டு ஓம்பின பான்மையும் பெரிதும் பாராட்டற் பாலதாகும். ஆகவே அதனைச் யிருக்கின்றது

சிறிதெடுத்துப்பேசுதல்

""

ன்றியமையாததா

இந்நிலவுலகிற் காணப்படும் உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்னும் இரண்டில் உயிர்ப்பொருளுக்குப் பயன் படுதற் பொருட்டாகவே உயிரில்பொருள்கள் அமைக்கப் பட்டிருத்தல் நன்கு புலனாகின்றது. ஆகவே இவ்வுலக அமைப்பும் இதன் இயக்கமும் எல்லாம் உயிர்களின் பொருட்டாகவே நடைபெறுகின்றன வென்பது எவரும் மறுக்கலாகாத உண்மை யாகும். இத்துணைச் சிறந்த உயிர்கள் இவ்வுலக அமைப்பிற் புகுந்து சிறிது காலங் காணப்படுதலும், அதன்பின் அவை காணப்படாது மறைதலும்,என்னையென்று நுணுகியாராயுங்கால், இவ்வுலகுக்கு வரும்பொழுது அறிவும் இன்பமும் இலவாய்த் தோன்றும் அவ்வுயிர்கள், இதன்கண் வந்து சிறிதுகாலந் தங்கியவளவானே அறிவுவளர்ந்து இன்பத்திற் றிளைத்தல் காண்கின்றேமாகலின், அவை அறிவுவளர்ச்சியும் அதன்வழியே இன்ப நுகர்ச்சியும் எய்துதற்கே இங்கு வருகின்றன வென்பது புலனாகின்றது. புலனாகவே, இவ்வுலகுக்குவரும் முன் அறியாமையுந் துன்பமும் வாய்ந்தனவாகவே எல்லாவுயிர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/59&oldid=1579681" இலிருந்து மீள்விக்கப்பட்டது