உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

❖ LDMMLDMELD- 10 மறைமலையம்

"உண்டால் அம்மஇவ் வுலகம், இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே, முனிவிலர், துஞ்சலும் இலர்,பிறர் அஞ்சுவது அஞ்சிப், புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின்

உலகுடன் பெறினுங் கொள்ளலர், அயர்விலர், அன்ன மாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன்றாட்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே.

(புறநானூறு 182) என்று நன்கு விளக்கிச் சொல்லிய செய்யுள் நினைவிற் பதிக்கற் பாலதாகும். இச் செய்யுளை உரையாசிரியர் இளம்பூரணர், தொல்காப்பியப் புறத்திணையியல் 17 ஆஞ்சூத்திரத்திற்கு மேற்கோளாக எடுத்துக்காட்டி "நோன்றாட்பிறர்க்கென முயலுநர் வணிகவேளாளர்” என்றதூஉம் மறவற்க. விருந்து வந்தவர் தம்மினத்தவர் அல்லாக்கால், அவர் எத்துணைப் பசியோடிருப்பினும் அவரைப் புறத்தே வருந்தியிருக்க வைத்துக் கதவடைத்துத், தாம் அகத்தே தம்மவரோடிருந்து விலாப் புடைக்கத் தின்று, தாம் தின்று மிகுந்ததைப் பின்னர் அவ் விருந்தினர்க்கு இடும் ஆரியப் பார்ப்பனர் தம் தந்நல வொழுக்கம், பண்டை நம் தமிழாசிரியர்மாட்டும் அவரது ஆணைவழியொழுகிய உயர் குடிப் பிறப்பினரான பண்டை நம் வேளாண்மாந்தர் மாட்டும் இல்லாமை, “இந்திரர் அமிழ்தம் யைவதாயினும் இனிதெனத், தமியர் உண்டலும் இலர்” என ச் ச் செய்யுண் முதலிற் சொல்லப்பட்டமையால் நன்கறியக் கிடக்கின்றது. வேற்றுமையின்றி மக்கள் ஒருவரோடொருவர் அன்பினால் அளவளாவி வாழும் நேயவாழ்க்கை, உணவருந்துங் கால் அவர் ஒருங்கிருந்து மகிழும் வழியல்லது உண்டாகாமை யானும், ஒருவர் தம்மை உயர்வாகவும் விருந்துவந்த பிறரைத் தாழ்வாகவும் நினைந்து அவரோ டருகிருந்து உண உணவெடுக்க ஒருப்படாது அவரை யொதுக்கித் தாம் தம்மினத்தவரொடு மட்டுந் தனியிருந்து அயிலுங்கால் அவர்க்கும் அப் பிறர்க்கும் மனவொற்றுமை எவ்வாற்றானும் உளதாகாமையானும் அத்தகைய வேற்றுமை யுணர்ச்சி யுடையார் மிகுந்துள்ள நாடு சிறந்த நேயவாழ்க்கைக்குரிய நாடாகாமையினை நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/101&oldid=1579724" இலிருந்து மீள்விக்கப்பட்டது