உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் 10

வ்

சூத்திரர்' என்றும் இரண்டகமாய்ப் பேசித் தமது பொருளைப் பலவகையாற் கவர்ந்துவரும் ஆரியப் பார்ப்பனர் சேர்க்கையால், தாமும் இப்போது தம்மவரல்லாதார் தம்மில்லத்திற்கு விருந்தினராய் வந்தால் அவரைப் புறம்பே வைத்துத், தாம் தம்மவரொடு மட்டும் உள்ளிருந்துணவருந்தித் தாம் உண்டு மிகுந்ததைப் பின்னர் அவர்க்கு இடுகின்றனர். வேளாளராகிய தம்மைச், ‘சூத்திரர்' எனப் பார்ப்பனர் வாய்கூசாது சொல்லுதலைக் கேட்டும், அதற்கு மருந்து தேடாது அதனை ஏற்றுக்கொள்ளும் அவர், தமக்குப் L பலவகையிற் பயன்படும் ஏனை இனத்தவர்களைத் தாமும் 'சூத்திரர்' என இழித்துரைப்பது எவ்வளவு நகைப்புக்கிடமாய் இருக்கின்றது! வேளாண்மக்களிற் பலர் தாம் பார்ப்பன வழக்கத்தைப் பின்பற்றி, இறந்துபோன தம் முன்னோர்க்கு வழிபாடு ஆற்றியபின், தம்மவரோடிருந்துண்டு கழித்த மிச்ச உணவையும் ஏழையெளியவர்க்குக் கொடுத்தால் தமக்குத் தீட்டுண்டாமெனப் பிழைபடக்கருதி, அதனை நிலத்தே வெட்டிய பள்ளத்திற் கொட்டிப் புதைத்து விடுகின்றார்கள்! தமக்குரிய உழவு தொழிலைத் தாம் செய்யாமல் தம்மகத்தே அவர் மடிந்து களித்திருக்கத், தமக்காக மழையிலும் பனியிலும் வெளியிலும் அல்லும் பகலும் பாடுபட்டுப் பயிர் செய்து அவ்வேழைகள் விளைத்துக் கொடுத்த பெருஞ்சோற்றை அவ்வேளாளர் தாம் நன்றாக விழுங்கிய பின்னும், எஞ்சிய சிறு மிச்சிற் சோற்றை யாதல் அவ்வேழை மக்கட்கு வயிறு குளிரக் கொடுத்தால் அவர் தீட்டுப்பட்டா மாண்டு போய்விடுவர்! ஐயோ! இவ்வாறு திருக்குறள் முதலான முதலான எந்தப் பழைய தெய்வத் தமிழ் நூலிலாவது சொல்லப் பட்டிருக்கின்றதா? வேளாளர் முதலான தமிழ் மக்கட்குச் சிறிதும் இசையாத வடமொழி நூல்களிற் பார்ப்பனர் தம்மையே எவ்வாற்றானும் உயர்த்தி வைத்து, ஏனையோரையெல்லாம் முற்றும் இழித்து வைத்து எழுதிய பொல்லா உரைகளை நம்பி, இஞ்ஞான்றை நம் தமிழ்மக்கள் இங்ஙனம் ஏமாந்து இழிபுபடுதலுந், தமக்குள் ஒற்றுமையின்றிச் சீர் குலைதலுந் தெய்வத்திற்கு அடுக்குமா? தம்மில்லத்திற்கு விருந்துவந்தவரும் பிறரும் எவராயிருப்பினும் அவரை முன் ஊட்டித் தாம் பின் உண்ணுதலன்றோ பண்டை நம் வேளாண்மாந்தர்க்குரிய விழுமிய ஒழுகலாறாக, மேலே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/103&oldid=1579726" இலிருந்து மீள்விக்கப்பட்டது