உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

79

நல்லிசைப்புலவனும் அரசனும் ஆகிய இளம்பெருவழுதி கட்டுறுத்துச் சொல்லியிருக்கின்றான்? ஆசிரியர் தெய்வத் திருவள்ளுவனும்,

66

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று'

(குறள் 82)

என்றருளிச் செய்திருத்தலை இஞ்ஞான்றே வேளாளர் அறிந் திருந்தால் இங்ஙனஞ் செய்து ஏதம் உறுவார்களா? அது கிடக்க. னிப் பழைய தமிழ்க்குடிமக்கள் தாஞ் செய்து போந்த பலவேறு தொழில்களாற் பலவேறு இனத்தவர்களாய்ப் பாகுபடுற்று நின்றார்களாயினும், அதுபற்றி ஒருவர் பிறர் ஒருவர் செய்யும் தொழிலையும் அத்தொழில் செய்வாரையும் இகழ்தல் இலராய்ப், பொதுக்கூட்டங்களின் எல்லாருமாய் ஏதொரு வேற்றுமையும் இன்றி ஒருங்கு அளவளாவி அன்பினால் ன்புற்று வாழ்ந்தது எதனாலென்றால், மக்களெல்லாரும் வாழ்க்கை நிலையில் ஓரியல்பினரேயாதலை அவர் நன்குணர்ந்து தெளிந்தமையினாலேயாம். எத்துணைப் பெருஞ்செல்வத்தில் இருப்பவராயினுஞ் செல்வமின்றி அன்றாடம் உழைத்துப் பெற்ற கூலிகொண்டு வயிறு பிழைப்பவ ராயினும், எல்லாரும் ஒரு நாளைக்கு உண்பது ஒருபடி அடிசிலேயன்றி அதற்குமேல் இல்லையே! அவரெல்லாரும் உடுப்பன மேலாடை கீழாடை இரண்டேயன்றி அவற்றிற்குமேல் இல்லையே! ஆதலால், மக்கள் சல்வத்தால் உயர்தலும் அஃதின்மையாற் றாழ்தலும் எல்லாம் வெறுஞ் சொல்லே! ஆகவே, பழந்தமிழ்மக்கள் வாழ்க்கையின் ஒத்த நிலைமையினை நன்குணர்ந்து பார்த்து, எவரையும் உயர்வுதாழ்வாக நினையாமல் எல்லாரையும் ஒத்த தன்மையின ராகவே நினைந்தொழுகினர்; ஒரோவொருகால் அவர் அந்நினைவிற் பிறழ்ந்து இறுமாப்புறக் கண்டால், அவரிடை யிருந்த நல்லிசைப் புலவர்கள் அவர்க்கு உடனே அவ்வுண்மை யினை அறிவுறுத்தி அவரைத் திருத்தி ஒருமையுறச் செய்து வந்தனர். இதற்கு, மதுரைக்கணக்காயனார்

மகனார்

நக்கீரனார் பாடிய ஒர் அரிய செய்யுள் சான்றாய் நின்று ஒளிக்கின்றது; அது வருமாறு;

“தென்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/104&oldid=1579727" இலிருந்து மீள்விக்கப்பட்டது