உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

❖ 10❖ மறைமலையம் - 10

நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி. உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே, செல்வத்துப் பயனே ஈதல்.

துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

وو

(புறநானூறு 189)

உலகமெல்லாம் ஒரு வெண்குடை நிழலில் வைத்து அரசு செலுத்தும் வேந்தனேயானாலும், தான் பயிர்செய்த ஒரு தினைப்புனத்தின் விளைவைக் காட்டி யானைகளுங் காட்டுப் பன்றிகளும் புகுந்து அழித்துவிடாமல் ரவும் பகலுங் கண்ணுறக்கங் கொள்ளானாய் அதனைப் பாதுகாக்கும் ஒரு கானவனேயானாலும் எல்லாரும் ஒருநாளைக்குக் கொள்ளும் உணவு ஒரு நாழியேயாகும்; அவர் உடுப்பன இரண்டு ஆடை களேயாகும்; இவையேயன்றிப் பிறப்பும் இறப்பும் நோயுங் கவலையுந் துன்பமும் இன்பமும் எல்லாம் எல்லார்க்கும் உள்ளனவேயாகும்; ஆதலாற், செல்வத்தாற் பெற்ற பயன் ஈகை அறங்களைச் செய்தலே யாகும்; செல்வத்தைப் பிறர்க்குக் கொடாமல் யாமே நுகர்வமெனில் அது கைகூடாமல் தவறுதல் பலவாகக் காணப்படுகின்றன' என்றும் இச் செய்யுட்பொருள் மக்கள் வாழ்க்கையின் ஒத்த தன்மையினைப் பசுமரத்தாணி அறைந்தாற்போல் எவ்வளவு திறமாகத் தேற்றுகின்றது! இத்துணைச் சிறந்த அரிய அறிவுரையினை அரிய மிருதி நூல்களிற் காண்டல் இயலுமோ? அம் மிருதி நூல்கள் பிறப்பளவில் மக்களுள் உயர்வு தாழ்வு வகுத்துக்கொண்டு, அவ் வகுப்புக்கேற்ற பயன் இல்லாப் புறவினைகளைச் செய்யுமாறு நுவன்றுசெல்லக் காண்கின்றனமேயன்றி, அறிவாலும், அன்பாலும், அறவினையாலுஞ் சிறந்தாரைச் சிறந்தெடுத்துப் பாராட்டிப் பிறப்பளவில் மக்களெல்லாரும் ஒரு தன்மையினரே யென அவை அறிவுறுத்தக் காண்கிலேம். அதனால், அந் நூல்கள் அவைதம்மை ஆக்கிய பார்ப்பனக் குருவினராலன்றி, ஏனை எல்லா மக்களாலும் எல்லாச் சமயத்தாராலுந் தழுவப் படாமலே ஒழிந்தன. மற்று, மேற்காட்டிய உண்மை அறவுரை போல்வனவே பொதிந்துள்ள திருக்குறள் நாலடியார் போன்ற தமிழ் அறநூல்களோ, தமிழ்மக்களேயன்றி, உலகம் எங்கணும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/105&oldid=1579728" இலிருந்து மீள்விக்கப்பட்டது