உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

81

உள்ள எல்லாமக்களும் எல்லாச் சமயத்தவரும் விரும்பித் தலைமீதேற்றுப் போற்றும் மேம்பாடு வாய்ந்தனவாய்த் திகழ்கின்றன. அது நிற்க.

6

இனி, மேலே விளக்கியவாறு அந்நாளிருந்த தமிழ்ப் பெருங்குடிகள் தாம் பிறப்பளவில் ஒத்த தன்மையினராதலை யுணர்ந்து, தம்முள் அன்பினால் அளவளாவுங் கடமையில் வழுவாதொழுகினமையாலும், ஒரோவொருகால் அவர் தம்மிற் சிலர் அக் கடமையின் வழுவக் கண்டால் அவர்காலத் திருந்த அறிவான் மிக்க நல்லிசைப்புலவராகிய சான்றோர் சிறிதும் அஞ்சாது விரைந்து சென்று அவர்க்கு அக் கடமையினை யெடுத்து இடித்துச் சொல்லி அவரைத் திருத்திவந்தமையாலும் அஞ்ஞான்றைக் குடிமக்கள் வாழ்க்கையும், அதற்குயிராய் உள்ள அரசவாழ்க்கையும், அன்பும் அறமும் நிரம்பித், தூய தீம்பால் பெய்த தூய பசும்பொற் குடமேயெனப் பொலிந்தன. அவ் விருதிறத்தார் வாழ்க்கைக்கும் இன்றியமையாத் துணையாய் நின்ற புலவர் வாழ்க்கையும், அத் தீம்பாற் பொலன்குடத்தைக் தமது திருக்கையிலேந்திய திருமாலேயெனத் தெய்வத்தன்மை மிக்கு விளங்கிற்று. அஃது அன்னதாதலைச் சிறிது விளக்குதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/106&oldid=1579729" இலிருந்து மீள்விக்கப்பட்டது