உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

10. புலவர்தம் இனிய இல்லற வாழ்க்கை

முன்னே எடுத்துக்காட்டிய கோப்பெருஞ்சோழன்

என்னும் அரசர்பெருமான் தன்னரசு துறந்து உயிர்நீத்தற்கு வடக்குநோக்கி யிருந்தவழி, அவற்கு இன்னுயிர் நண்பரான பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான் அவனைப் பிரிந்து உயிர்வாழ மாட்டாராய்த் தாமும் அவனோடு ஒருங்கு உயிர் நீத்தற்கு அவனிருந்த இடமே போந்தனர். அப்போது அவ்வரசனோடு உடனிருந்த சான்றோர்கள், பிசிராந்தையார் ஆண்டில் முதிர்ந்தும் உருவத்தில் இளையராய் விளங்குதல் கண்டு வியந்து, "கேட்குங்காலம் பலவாலோ, நரைநுமக்கு இல்லையாலோ?” என அவரை நோக்கி வினவ, அவர்,

'யாண்டு பலஆக நரைஇல ஆகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின்,

மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர், யான்கண் டனையர்என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும், அதன்தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே'

(புறநானூறு 191)

என்னும் அருமருந்தன்ன செய்யுளால் அச் சான்றோர்க்கு விடைகூறினர். தாம் ஆண்டில் முதிர்ந்தும் நரையிலா இளைய வுருவத்தொடு தாம் விளங்குதற்கு ஏற்ற காரணங்களைக் கூறுவான் புகுந்த ஆசிரியர் பிசிராந்தையார், தம் மனைவி மக்கள் எல்லா நற்குணங்களினாலும் நிரம்பினராயிருத்தலை முதற்கண்

எடுத்துரைக்கும்

நுட்பம்

பெரிதும் நினைவுகூரற்பாலது. ஓராண்மகன் தானுந் தன் குடும்பத்தவரும் னிதுவாழ்தற்கு இன்றியமையாது வேண்டும் பொருள் கடைக்கூட்டுதற் பொருட்டு, நாள் முழுதும் வெளியேசென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/107&oldid=1579730" இலிருந்து மீள்விக்கப்பட்டது