உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

93

இனி, அம் முழுமுதற் கடவுளாகிய முக்கணானுக்கு மக்களெல்லாரும் உரிமைப் புதல்வர்களாகலின் அவர் களெல்லாரும் ஒரே குலத்தினராய் ஒருவரோடொருவர் வேற்றுமை யேதுமின்றி அளவளாவி வாழ்தற்குரியரென்னும் உண்மையினையும் நம் பண்டைத் தமிழாசிரியர் கண்டறிந்தமை. "யாதும் ஊரே, யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா:

நோதலுந் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவதன்றே; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்று மிலமே; முனிவின் இன்னா தென்றலும் இலமே; மின்னொடு வானந் தண்டுளி தலைஇ ஆனாது கல்பொரு திரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉமென்பது, திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே

சிரியோரை இகழ்தல் அதனினும் இலமே

(புறநானூறு 192)

என்னும் ஆசிரியர் கணியன் பூங்குன்றனா ரருளிய திருப் பாட்டால் நன்கு விளங்கிக்கிடத்தல் காண்மின்கள்! இவ்வரும் பெறற் செய்யுளிற் பொதிந்துள்ள மெய்ப்பொருள் விழுப்பத்தை என்னென்பேம்! முழுமுதற் கடவுள் ஒருவனே யென்றும், அம் முதற்பெருந் தந்தைக்கு எல்லா உயிர்களும் இனிய மகாரே யாவரென்றும், அவ் வுயிர்களுள்ளும் மக்கள் எல்லாரும் ஆறறிவுடையராகலின் அவர் தம்மைத் தோற்றுவித்த எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையையும் அத் தந்தைக்குத் தாம் எல்லாம் அருமைப் புதல்வர்களாம் உரிமையையும் நன்குணரத் தக்க நிலையினரேயென்றும் இனிதுணர்ந்தன்றோ இச் செய்யுளின் முதற்கண் ஆசிரியர் ‘எல்லாம் எமக்கு ஊராகும்; எல்லாரும் எமக்கு உறவினராவர்;' என்றருளிச் செய்தார். தேய வேற்றுமையானும், மொழி வேற்றுமையானும், நிறவேற்றுமை யானும், நடையுடை யுணவுவேற்றுமையானுந் தம்மை வேறு வேறாகக் கருதி ஒரு பாலார் மற்றொரு பாலாரை இழித்துத்

ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/118&oldid=1579743" இலிருந்து மீள்விக்கப்பட்டது