உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் - 10

தம்மை அவரின் மேலாக உயர்த்தி, ஒருவரோ டொருவர் போராடிக்கழியும் இம் மாநிலத்தில், மக்களெல்லார்க்கும் பிறப்பு ஒன்றாய் இருத்தலையும், இடம் மொழி நிறம் நடையுடை யுணவு முதலாயினவெல்லாஞ் சில சில காரணத்தாற் றோன்றி அப்பிறப்பின் ஒப்புமையினைச் சிதைக்கமாட்டாவாய்க் கழிதலையும் உண்மையான் ஆராய்ந்துணர்ந்து பார்ப்ப வர்களுந், தாங் கண்ட அவ் வரும் பேருண்மையினைப் பிறர்க்கெடுத்துரைப்பவர்களும் அரியரா யிருக்கின்றனரன்றோ? அதிலும், இக் காலத்துப்போ லன்றி இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட அக்காலத்திலேயே இவ்வுண்மை யினைக் கண்டார் நம் செந்தமிழ்ச் சான்றோரே யல்லால் வேறு பிறரல்லாமையினை, அப்பண்டை மக்கள் நூல்களை ஆராய்ந் துணரும் முகத்தால் நாம் அறியுந்தோறும் நந் தமிழ்ச் சான்றோரின் தூய உண்மை அறிவின் மாட்சி நமக்குப் பெரியதோர் இறும்பூதினை விளைக்கின்றது!

தமிழரல்லாத ஆரிய முனிவர்களோ மக்களைப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுடையராகக் கற்பனை செய்து, அவருட் பார்ப்பனரே இறைவன் முகத்திற் றோன்றிய வரென்றும், ஏனை அரசர் வணிகர் ஏவலர் என்பார் இறைவன் றோளிலுந் தொடையிலும் அடியிலும் முறையே தோன்றியவ ரென்றும் ஒரு புனைந்துரை கட்டிப், பார்ப்பனர்க்கே இம்மை மறுமை இன்பநுகர்ச்சிகளை யெல்லாம் வரைந்து வைத்து, ஏனை யோரை யெல்லாம் அறியாமைக்குந் துன்பத்திற்கும் உரிய வராகக் கிளந்து அவரை இன்பத்திற்குப் புறனா வைத்தார். ஆனாலும், அவர் கட்டிய அப் புனைந்துரையும், அதன் வாயிலாக அவர் பிறரைத் தமக்கு அடிமைப்படுத்த முயன்ற முயற்சியும் பண்டைத் தமிழ் மக்கள் பாற் செல்லவில்லை. இனிப், பழைய நாகரிகமக்களில் எபிரேயரும் (Hebrews) இசரவேல் என்னும் மாந்தர் குழுவே இறைவனுக்குரிய மக்கட் குழுவாமென்றும்,

அப்பு

ஏனையோர் அன்னரல்லரென்றும் நிறுவுதலிற் கடைப்பிடியாய் நின்றனர். இவரை யொப்பவே மகமதியருந் தம்மவரல்லாத பிறரையெல்லாங் கடவுளுக்குப் புதல்வர்களல்லரெனக் கரைகின்றனர். பௌத்தர்கள், மாந்த ரெல்லாரையும் ஒத்த நிலைமையில் வைத்து அறவுரை பகரினும் அவர்கட்குக் கடவுள் நம்பிக்கை யில்லாமையால், அவர் கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/119&oldid=1579744" இலிருந்து மீள்விக்கப்பட்டது