உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் 10

“பிற்ப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யால்”

(குறள் 972 )

என்றும்,

"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்

கீழல்லார் கீழல் லவர்

(குறள் 973)

என்றும்,

“விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்.

(குறள் 410)

என்றும்,

66

“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்”

(குறள் 393)

என்றும்,

66

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்

(குறள் 2)

என்றும்,

66

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று”

(குறள் 259)

என்றும்,

“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி”

என்றும்,

(குறள் 356)

“யான்என தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்"

(குறள் 346)

என்றும், அப் பண்டைத் தமிழ்ச்சான்றோர் கொள்கைகளையே தாம் அருளிச் செய்த திருக்குறளில் யாண்டும் வலியுறுத் துரைத்தல் காண்க. பிறப்பளவில் எல்லா மாந்தரும் ஒருங்கொத்தலால், அவ்வவர்தம் அறிவாலுங் குணத்தாலுஞ் செயலாலுமன்றி மற்றுப் பிறப்பொன்றே காரணமாகக் கொண்டு ஒருபாலாரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/121&oldid=1579746" இலிருந்து மீள்விக்கப்பட்டது