உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

97

உயர்த்தலும் ஏனை யொருபாலாரை இழித்தலும் பொருந்தா வன்பதூஉம், பிறப்பளவில் தம்மை மேலோராகக் கருதி யிருப்பவர் அறிவு குணச் செயல்களில் இழிந்தவராயின் அவர் மேலோராதல் செல்லாதென்பதூஉம், பிறப்பளவிற் கீழோராகக் கருதப்படுபவர் அறிவுகுணச் செயல்களில் உயர்ந்தோராயின் அவரே மேலோராவரென்பதூஉம், ஒருவரை மேலோருங் கீழோரும் ஆக்குவது கல்வியறிவின் உண்மை இன்மைகளே யாகலிற் கல்வியறிவில்லாதவர் எவராயிருப்பினும் அவர் மக்களுள் விலங்குகளே யாவரென்பதூஉம், அத்துணைச் சிறந்ததாகிய கல்வியறிவு காணப்பட்டதுகொண்டு காணப்படாத முழுமுதற் கடவுளை யறிதற்குத் துணைசெய்வதாகலின் அதனைப் பெற்றவர் கடவுளை யுணர்ந்து அவன் றிருவடிகளைத் தொழுது பெரும்பயன் பெறாராயின் அதனாற் பயனில்லை யென்பதூஉம், முழுமுதற் கடவுளைத் தொழுது பிறவிப்பயன் பெறுதல் கைவிட்டு மக்களைப் போலவே இறைவனால் அரிது படை டைக்கப் பட்ட ஆடு மாடு குதிரை முதலான உயிர்களைக் கொன்று ஆரியர் வேட்கும் உயிர்க்கொலைவேள்வி மேலும் மேலுந் தீவினையையே பெருக்குமல்லது தினைத்தனையும் நன்மை பயவா தென்பதூஉம், உலகு உயிர் முதல்வனைப்பற்றிய உண்மைகளைக் கற்றறிந்து மெய்ப்பொருளாகிய இறைவன் நிலையைக் கண்ட மெய்யறிவினரே மீண்டும் இப்பிறவிக்கு வராத பேரின்ப நெறிக்கட் செல்வரென்பதூஉம், முதல் வனல்லாத தன்னை முதல்வனாகவும் எப்பொருட்கும் உரியன் அல்லாத தன்னை அப்பொருட்கெல்லாம் உரியனாகவும் பிழைபடக் கருதிக் செருக்கும் முனைப்பு உளதாங்காறும் ருவன் தனது சிறுமையையும் எல்லாம் வல்ல இறைவனது பருமையையும் உள்ளவா றுணரானாகலின் யான் எனதென்னுஞ் செருக்கற்றவனே இறைவன் திருவடியைத் தலைப்படுவனென்பதூஉம் ஆசிரியர் திருவள்ளுவனார்க்கும் அவர்க்கு முன்னும் பின்னுமிருந்த ஏனைத் தமிழ்ச் சான்றோர்க்கும் முடிந்த கொள்கைகளாகும்.

ஆகவே, ஈண்டுக் கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே, யாவருங் கேளிர்” எனக்கூறிய உரிமையுரை, இறைவனாகிய ஒரு முழுமுதற் றந்தைக்குத் தாமும் தம்மை யொத்த எல்லா மாந்தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/122&oldid=1579747" இலிருந்து மீள்விக்கப்பட்டது