உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் 10

உண்மையிற் புதல்வர்களேயாயிருக்குந் தன்மையினைக் கண்டு பகர்ந்த மெய்யுரையேயாம்.

னி,அப்பெற்றியினரான மக்கள் தம்முட் பலர் நல்லராயுஞ் சிலர் தீயராயும் இருத்தற்குக் காரணம் என்னை யென்று நமக்குள் ஐயம் நிகழுமாகலின், அதனைச் தீர்த்தற்குத் “தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்று அருளிச் செய்தார்; ஒருவர் தீயராதற்கும் ஏனையொருவர் நல்லராதற்கும் அவரவர்தம் எண்ணமும் முயற்சியுமே காரணமாகுமல்லால், அவர் அவ்வாறாதற்குப் பிறர் காரணராகாரென்னும் அரும்பே ருண்மையினை இப் புலவர்பெருமான் தேற்றியதுங் கருத்திற் பதிக்கற்பாற்று. எனவே, மக்கள் ஒவ்வொருவர்க்கும், மக்களினுந் தாழ்ந்த ஏனை யெல்லாச் சிற்றுயிர்கட்குந் தாந்தாம் வேண்டியவா றெண்ணும் எண்ணமுந் தாந்தாம் வேண்டியவாறு ஒன்றைச் செய்தலும் பிறிதொன்றைச் செய்யாது விடுதலுமாகிய முயற்சியும் உளவென்றும், அவ்வெண்ணத்தைச் செவ்வனே எண்ணி அம் முயற்சியைச் செவ்வனே செய்துவரும் உயிர்கள், அறிவு விளக்கத்திலும் அவ் வறிவு விளக்கத்திற் கேற்ற உடம்பின் அமைப்பிலும் உயர்கின்றனவென்றுந், தம்முடைய எண்ணத்தையும் முயற்சியையுஞ் செவ்வனே செலுத்தாத உயிர்கள் வரவர அறிவு விளக்கத்தை இழந்து அதற்குத்தக உடம் பினமைப்புங் குன்றப் பெறுகின்றன வென்றும் இஞ்ஞான்றை உயிர்நூலார் (Biologists) கண்டறிந்துரைக்கும் அரும் பேருண்மை, இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே கணியன் பூங்குன்றனாரால் நன்கறிந்துரைக்கப்பட்டமை வியக்கற்பாலதா யிருக்கின்றது. தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த,

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல்’

(குறள் 505) என்னுந் திருக்குறட் பொருளுங் கணியன் பூங்குன்றனார் கருத்தோடு ஒத்திருத்தலும் உணரற்பாற்று.

னித், தீய நினைவு, செயல்களால் வருந்துதலும், நல்ல நினைவு, செயல்களால் அவ் வருத்தந் தீரப்பெறுதலும் அவ்வவர்தம் மனமுயற்சி மெய்ம்முயற்சிகளால் வருவனவேயன்றி, அவை தாமும் பிறரால் வருவன அல்லவென்பதனையும் "நோதலுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/123&oldid=1579748" இலிருந்து மீள்விக்கப்பட்டது