உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் 10

இறந்துபடக் கண்டவழி அவ்வாறு பெருந்தயர்கூரக் கண்டதுண்டோ, இல்லையன்றே. ஆதலால்,

உறவின்

கிழமையினை நினைந்தன்றோ அவர்க்கு அவ் வருத்தந் தோன்றாநிற்கின்றது. மற்று, அவ்வுற வுரிமையுனை நினையாது, ‘உலகந் தோன்றிய காலந்தொட்டு, உலகில் உடம்பொடுகூடிப் பிறந்த வுயிர்களெல்லாஞ் சில காலம் அவ்வுடம்பிலிருந்து பின்னரதனைவிட்டு இறந்துபோதல் எவராலும் மாற்றலாகா இயற்கைநிகழ்ச்சியாய்ப் போதருகின்றதன்றோ? இன்றைக்கு இவர் இறந்துபட்டால், நாளைக்கோ இன்னுஞ் சிலநாட் கழித்தோ யாமும் இறந்துபடுதல் திண்ணம்; ஆதலால் இதற்காக யாம் வருந்தி மனம் மாழ்குதல் எற்றுக்கு?' என்று ஒருவர் சிறிது எண்ணிப் பார்ப்பரானால், அவர்க்குண்டாய அப் பெருந்துயரின் வன்மை குன்றிவிடும். அதுபற்றித்தான் சாதலும் புதிய நிகழ்ச்சியன்று, அது தொன்றுதொட்டு நிகழ்வ தொன்றென, அதனால் நிகழும் பெருந்துயர் தீர்தற்கு ஆசிரியர் எளியதொரு வழிகாட்டினாரென்க.

அங்ஙனமே, நோயும் வறுமையும் இன்றிப் பல்வகையின் பங்களும் நுகர்ந்துவாழும் வாழ்க்கை வாய்த்துழியும், அஃது ஊழ்வினையானும் அதனோடொத்துத் தோன்றும் முயற்சி யானும் ஒரு சிலர்க்குக் கைகூடுதல் தொன்று தொட்ட நிகழ்ச்சியாய்ப் போதரலின், அதுகண்டு மனம் பொங்கி வழிதல் அறிவின் மிக்கார்பாற் காணப்படுதல் இல்லை. ஏனென்றால், அத்தகைய இன்ப வாழ்க்கையிலிருந்தோர், ஊழ்வினை மாறி விட்டால் அதற்குத் தக மனமடியுடையராகிச் செல்வமெல்லாம் ஒருங்கிழந்து, வறியராகி இரத்தலையும் ஆங்காங்குக் காண்கின்றோம்; ஆதலால், மெய்யறிவுடையார் செல்வ வாழ்க்கையைக் கண்டு மெய்ம்மறந்திரார் என்பது.

உலகியல்

அதுபோலவே, எவரானும் வெறுக்கப்படுவதாகிய வறிய வாழ்க்கையில் ஒருவர் இருந்துழியும், அவர் நிகழ்ச்சியினை உண்மையான் ஆராயுந் தன்மையினராயின், அதுபற்றி மனம் அழியாராய், ‘இஃது ஊழ்வினைப் பயனாகலின் தனான் மனம் வருந்துவ தெற்றுக்கு? பெற்றதுகொண்டு மனவமைதியாயிருந்து வாழ்தலே செயற்பாலது' என்று மனநிறைவொடு தமது வாழ்க்கையினைச் செலுத்தாநிற்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/125&oldid=1579750" இலிருந்து மீள்விக்கப்பட்டது