உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

101

ன்னும், மழைபெய்தலாற் பெருகியோடும் ஒரு பெரிய யாற்றுவெள்ளத்தி னிடைப்பட்டதொரு தெப்பமானது அவ் வெள்ளஞ் சென்றவழியே செல்லுமல்லது அதனை எதிர்த்துச் செல்லாதன்றே; அதுபோல, மேற்சென்ற பிறவிகளிற் செய்த பழவினைத் தொகுதியாகிய ஊழின்வழியே உயிர்களின் நினைவும் முயற்சியுஞ் செல்வதல்லாமல், அவ் வூழுக்கு எதிராய் அவை செல்லவல்லனவாய் இருத்தலைப் பெரும்பாலும் யாண்டுங் காண்கிலேம். அதனாற், பழைய நல்வினைப்பயனால் நினைவும் முயற்சியும் வலிவேறப்பெற்றுப் பெரியராய்த் திகழ்வாரைக் கண்டு வியந்து பேசுதலும் இலம்; பழைய தீவினைப்பயனால் நினைவும் முயற்சியும் பழுதுபட்டுச் சிறுமையுடையராயிருப்பாரைக் கண்டு இகழ்ந்துபேசுதலும் இலம். ஆனாலும், பெரிய ராயினாரை, வியந்து பேசுதல் ஒரோவொருகால் நமக்கு இன்றியமையாததாயிருப்பினுஞ், சிறியராயினாரை இகழ்ந்து பேசுதல் நமக்கெக்காலத்தும் இசையாது.அதனால் நமக்கு “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்று ஆசிரியர் கணியன் பூங்குன்றனார் தாம் முற்றொடங்கிக் கூறிய ஒப்புயர்வற்ற கொள்கைக்குப், பிற்றொடர்ந்து கூறியவை களை ஏதுவாக வைத்துரைத்த நுட்பம் உண்மையறிவினா ரெல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்பம் பயப்பதா மென்க.

இங்ஙனமாகப் பண்டை நல்லிசைத் தமிழ்ப்புலவரும் நல்லாசிரியரும் முழுமுதற் கடவுளாகிய முக்கணானையே தாழுது, தம்மையொத்த எல்லா மாந்தரையும் ஏதொரு வேற்றுமையுங் காணாது அவற்குரிய உண்மை மகாராகவே நினைந்து, எல்லாரிடத்தும் அன்புபூண்டு ஒருமித்து வாழ்ந்து வந்தமை இயன்றமட்டும் நன்கெடுத்துக் காட்டப்பட்டது. இனிப், பிற்காலத் தமிழ்ப்புலவரின் நிலையினைச் சிறிதெடுத்து விளக்குவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/126&oldid=1579751" இலிருந்து மீள்விக்கப்பட்டது