உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

12. பின்றைத் தமிழ்ப்புலவர்

பல்லாயிர

ஆண்டுகளுக்கு முற்றொட்டே

தமிழ் முன்னோர்கள் நாகரிகத்திற் றலைசிறந்து விளங்கித், தம் பின்னோர் பொருட்டுப் பல்லாயிரக்கணக்கான விழுமிய தமிழ் நூல்களைப் பல துறைப்பொருளுந் தெளிந்துவிளங்க இயற்றி வைத்தும், அவை யிற்றை அவர்தம் பின்னோர்கள் கருத்தாய்ப் பாதுகாத்து வையாமையின், அவையிற்றிற் பெரும்பாலன அழிந்துபோயின. சிறுபான்மை அவ்வாறழிந்து போகாமல் தப்பித்தவறி அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதர்ந்து காணக்கிடந்த துண்டுப் பாட்டுகளே இடை டைக்காலத்துச் சான்றோர்களால் வருந்தித் தேடி யெடுத்து, 'அகநானூறு, 'புறநானூறு' 'நற்றிணை குறுந்தொகை,’ ஐங்குறுநுறு ‘பதிற்றுப்பத்து,' 'கலித்தொகை' 'பரிபாடல்' என்னும் எட்டுத்தொகை நூல்களாகத் தொகுத்து வைக்கப்பட்டிருக் கின்றன. இங்ஙனந் தொகுத்து வைக்கப்பட்டுள்ள பாட்டு களிலும் எத்தனையோ பல சிதைந்த நிலைமையிலேயே இன்னும் வழங்கி வருகின்றன. மிகப்பழைய காலத்திலியற்றப் பட்ட தமிழ்ச்சான்றோர் நூல்களில், முழுநூலாக நமக்குக் கிடைத்திருப்பது தொல்காப்பியம் ஒன்றுமே யாம். ஏனைப் பல நூல்களிலிருந்து சிற்சில பாட்டுகளைத் தவிர, அந் நூல்கள் முற்றுமே அகப்படாமல் அந்தோ அழிந்தேபோயின!

இனிப், பண்டைத் தமிழ்ச் சான்றோரது மெய்வழக்குத் தழீஇத் தொடர்பாக இயற்றப்பட்டுவந்த தனிச் செந்தமிழ் நூல்களில் ஆசிரியர் திருவள்ளுவநாயனார் இயற்றிய தெய்வத் திருக்குறள் நூலே இறுதியாவது. ஆகவே, திருக்குறணூற் கால எல்லைவரையிற் சென்றகாலமே பழந்தமிழ்க்காலமாமெனவும், அக்காலத்து நிலவிய தமிழ்வல்ல அறிஞர்களே “முற்காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/127&oldid=1579752" இலிருந்து மீள்விக்கப்பட்டது