உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

103

தமிழ்ப்புலவர்" ஆவரெனவும் பிரிந்துணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இனித், திருக்குறளுக்குப் பின் எழுந்த நூல்களிற், முழுநூலாவதூஉம், பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் தம் மெய்வழக்கே பெரும்பாலுந் தழீஇச் செல்வதூஉம் ஆசிரியர் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் விழுமிய பொருட்டொடர்நிலைச் செய்யுளேயாம். இ ஃது த்துணைச் சிறந்த நூலேயாயினும், வடநாட்டிலிருந்து வந்து தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்த சமணர் பௌத்தர்க்குரிய கோட்பாடுகளும் சொற்றொடர்களும் இதன்கட் சிறுபான்மை இடையிடையே விரவிக் காணப்படுதலின், இது செந்தமிழ்ச் சான்றோரியற்றிய பண்டை நூல்வரிசையில் வைக்கப்படுதற்குரிமையிலதாயிற்று. ஆயினும் பழந்தமிழ்ச் சான்றோர் காலத்துக்குப் பின்னெழுந்த நூல்களிற், சிலப்பதி காரங் காலத்தினால் முற்பட்டதாதலுடன், தமிழ்ச்சுவை நிரம்பித் துளும்புந் தகையானும் முன்வைக்கப்படுந் தகுதிப் பாடுடையதாகும்.

இனி,

அவர் வழங்கிய வடசொற்கள்

இச் சிலப்பதிகாரத்தை யடுத்துத் தோன்றி அதனோ ாருகாலத்தினதாக வைக்கப்படும் முழு நூலாகிய மணிமேகலை என்னுந் தொடர்நிலைச் செய்யுள் தமிழ்ச் சொற்சுவையில் முதிர்ந்த பதம் வாய்ந்த தொன்றேயாயினும், இதன்கட் பௌத்தமதத்தினர் கட்டிய கதைகளும், அவர்க்குரிய வடசொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகளுஞ், சிலப்பதிகாரத் தினும் பார்க்கப் பன்மடங்கு மிகுதியாய் விரவிக் காணப்படு கின்றமையின், இதுவும் பண்டைத் தமிழ்நூல் வரிசையில் வைக்கப்படுதற்கேற்ற தகுதியிலதாயிற்று.என்றாலும், இடைக்காலத் தெழுந்தநூல்களிற் சிலப்பதிகாரத்தொடு தோழமைகொண்டு, இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முன்னரே தோன்றிய பழைமையுடை சிறந்த தமிழ் முழு நூலாகலின் இதுவும் பாராட்டப்படுதற்குரிய செந்தமிழ் நூலேயாகும்.

இனிச், சிலப்பதிகார மணிமேகலை காலத்தை யடுத்துத் தோன்றிய திருவாசகமுந் திருச்சிற்றம்பலக் கோவையாருஞ் செந்தமிழ்ச் சொற்பொருட் சுவைநிரம்பித் ததும்பு மாட்சி யுடையவாதலுடன், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/128&oldid=1579753" இலிருந்து மீள்விக்கப்பட்டது