உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் 10

அருட்பெருநிலையினை எல்லார்க்கும் விளங்கத் தெருட்டி, அவரை மீண்டு பிறந்திறவா மெய்ந்நிலையில் ஏற்றுவிக்கும் அருட்டிறம் வாய்ந்தனவுமாகும்.

இவற்றிற்குப் பிற்றோன்றிய இடைக்காலத்து நக்கீரனார், காரைக்காலம்மையார், இடை க்காலக் கபிலர்

பரணர்

கல்லாடனார், திருநாவுக்கரையர், திருஞானசம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், பொய்கை பேய் ஆழ்வார்கள் அருளிச் செய்த செந்தமிழ் நூல்கள் தெய்வமாட்சியிற் சிறந்து விளங்குவனவாகும்.

இவ்விடைக்காலத்திற் றோன்றிய பெருங்கதை, புறப் பொருள் வெண்பாமாலை, நாலடியார், பழமொழி, கல்லாடம், சூளாமணி, சிந்தாமணி, திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம், ஞானமிர்தம், சிவஞானபோதம் சிவஞான சித்தி முதலிய நூல்களெல்லாஞ் செந்தமிழ்த் திட்பநுட்பஞ் செறிந்தனவாதலுடன், பிற்கூரிய நான்கு நூல்களும் மெய்யன்பும் மெய்யறிவுந் தேற்றுந் தனிப் பெருஞ் சிறப்பும் ஒருங்கு வாய்ந்தனவாகும்.

இங்ஙனந் திருவள்ளுவர்க்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்துத் தோன்றிய சிலப்பதிகார மணிமேகலை காலத்திருந்து, அவர்க்குப்பின் ஆயிரத்து முந்நூறியாண்டு கழித்துக் தோன்றிய சிவஞானபோதஞ் சிவஞானசித்தியார் காலம் வரையிற் றோன்றிய தமிழாசிரியர் சமயாசிரியர் சந்தானாசிரியர்களும் அவர் இயற்றிய தமிழிலக்கண இலக்கிய நூல்களுந் தெய்வ அருணூல்களும், வடசொற்றொடர்கள் வடமொழி வழக்குகள் வரவர மிகுதியாய் எடுத்தாளக் காண்டுமாயினும், அவரும் அவரியற்றிய நூல்களும் பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் சன்ற நெறிவழாமல் அவர் தேற்றிய சொற்பொருள் வழக்கே கடைப்பிடித்துத், தமிழறிவு பெருக்கித் தமிழ்மக்களை அறிவிலும் அன்பிலும் விளங்கச் செய்தமை காண்டும். இவ் விடைக்காலத்துப் பெரியார்கள் வடமொழிச் சொற்கள் சொற் றொடர்கள் வழக்குகளைத் தழீஇ யொழுகினார்போற் காணப் படினும் அவர் தழீஇய அவையெல்லாம் ஆரியமுனிவர்க்கு உரியவல்லவாய், அவ் ஆரியமுனிவரைத் திருத்துதற் பொருட்டு, அத் தமிழ்ப் பெரியார் தம்மாலேயே அவ்விடைக்காலத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/129&oldid=1579754" இலிருந்து மீள்விக்கப்பட்டது