உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

105

படைக்கப்பட்டனவாகும். இவர் ஆக்கிய வடசொற்கள் சொற்றொடர்கள் கதை வழக்குகள் முதலியனவெல்லாம் வடமொழிக் குரியனபோற் காணப்படினும், அவையெல்லாம் ஆரியர்க்குரிய பண்டை இருக்கு எசுர் சாமம் அதர்வம் முதலிய நால்வேதங்களிலாதல், அந் நால்வேத வழிவந்த பிராமணங் களிலாதல் காணப்படாமையின் அவை பண்டையாரியர்க்குரிய அல்லவென்பது உள்ளங் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நன்கு ளங்காநிற்கின்றது. அற்றாயின், முன்னை ஆரிய நூல்களிற் காணப்படாமல் இடைக் காலத்துத் தமிழ்ச்சான்றோர்களால் வடமொழியில் ஆக்கப்பட்ட அவை தம்முட் சில பல ஈண்டுக் காட்டுக வெனிற், காட்டுதும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/130&oldid=1579755" இலிருந்து மீள்விக்கப்பட்டது