உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

13. தமிழாசிரியர் ஆரியத்தில் ஆக்கியவை

ஈசுரன்றன் ஐம்முகங்களின் பெயர்களான ஈசானம், தத்புருஷம், அசோகம், வாமம், கத்யோஜாதம் என்பன பண்டை ஆரிய நால்வேதங்களிற் காணப்படவில்லை.

சிவபெருமானுக்குரிய

சிறப்புப் பெயர்களான அம்பிகாபதி, உமாபதி, ஈசானன், மகாதேவன் முதலான சாற்கள் மிகப் பழைய ஆரிய நூலாகிய இருக்கு வேதத்திற் காணப்படவில்லை. மற்று, இருக்குவேதத்திற்கு எத்தனையோ காலம் பிற்பட்டதாகிய எசுர்வேதத்திலே தான்

சிவபிரானுக்குரிய பெயர்களாக முதன்முதற் காணப்படு கின்றன. அற்றேல், உருத்திரன் எனும் பெயர் இருக்குவேதத்திற் பலவிடங்களிலும் காணப்படுதல் என்னையெனின்; ஆரியர் கொணர்ந்த சிறு தெய்வப் பாட்டுகளைப் பழந்தமிழ்க் குடிகளாகிய பரதர் வகுப்பிற் றோன்றிய வியாசர் என்னுந் தமிழ்முனிவர் தொகுத்து வகைப்படுத்திய ஞான்று, தமிழராகிய தமக்குரிய சிவபிரானையும் அவ் ஆரியர் வணங்கி நலப்படல் வேண்டித், தாம் ஆரிய மொழியில் உருத்திரன்மேல் இயற்றிய சில பதிகங்களையும் அவ் வியாசமுனிவர் அதன்கட் கோத்துச் சேர்த்துவைத்தார். அதனால், உருத்திரன் என்னுஞ் சிவபிரான் பெயர் இருக்குவேதத்தின் இடையிடையே விரவித்தோன்று வதாயிற்று. இனி, உருத்திரன் எனும் பெயர் இருக்கு வேதத்தில் ஒரோவிடங்களில் விரவிநிற்குமாறு தமிழ்ச் சான்றோர் செய்தாற்போலச், சிவன் எனும் பெயரும் அதன்கண் அங்ஙனம் நிற்குமாறு அவர் செய்யாமை யென்னையெனின்; சிவன் எனும் பெயர் மாயையைக் கடந்து நிற்கும் முழுமுதற் கடவுட்குரிய சிறப்புப் பெயராகும்; இதனாலன்றே அயல்நாட்டவரிற் பழைய நாகரிக மக்களாகிய எபிரேயரும் (Hebrews) எல்லாம்வல்ல இறைவனைச் சிகோவா (Jehovu) என்றுங் கிரேக்கர் (Greeks)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/131&oldid=1579756" இலிருந்து மீள்விக்கப்பட்டது