உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

❖ LDMMLDMELD-10 மறைமலையம்

அங்ஙனமே நம்புமாறுசெய்து உலகத்திற் பொய்யைப் பரப்பி மெய்யே விளங்க வொட்டாமலுந் திரிபுபடுத்தினர். அவ்வாறு பொய்யை மெய்யாக நம்புவதிலும் அதனைப் பிறரும் நம்புமாறு செய்வதிலுமே பிற்காலத்துப் புலவரிற் பெரும்பாலார் அழுந்திப் பழகிவிட்டமையால், அவர் கதையைவிட்டு இலக்கியச் சுவை தோன்றக் கூறுமிடங்களிலும் மெய்யுரை பகரமாட்டாராய்ப் பொய்யே கூறுவாராயினர்.மற்றுப்,பண்டைத் தமிழாசிரியர்களும், அவர்வழி பேணிய இடைக்காலத்தாசிரியர் சிலரும் யாண்டுந் தாம் மெய்யே காண்பதொடு, தாங்கண்ட மெய்யையே பிறர்க்குங் காட்டுவாராய்த் திகழ்ந்தமையின், அவர் இலக்கியச் சுவை தோன்றக் கூறுவனவும் இயற்கை நிகழ்ச்சியொடு முழுதொத்து மெய்யாகவே மிளிர்கின்றன. இவ் வேறு பாட்டினை இரண்டு எடுத்துக் காட்டுகளான் விளக்குதும்: கொல்லி மலையாண்ட வல்வில் ஓரி என்னுந் தலைவனைப் பாடிய பழந்தமிழ்ப் புலவாபெருமானான வன்பரணர் அவனது விற்றொழிலாண்மையினைச் சிறந்தெடுத்துக் கூறுதற்குப்

புகுந்து,

“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி

பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப் புழற்றலைப் புகர்க்கலை உருட்டி உரற்றலைக் கேழற் பன்றி வீழ அயலது

ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும்

வல்வில் வேட்டம் வலம்படுத்திருந்தோம்”

(புறநானூறு 152)

என்று அதனை வியந்துபாடியிருக்கின்றார்: இதன்பொருள் வருமாறு: 'யானையைக் கொன்று கீழேவிழச்செய்த, சிறந்த நாணினின்றும் விடுக்கப்பட்ட அம்பானது பெரிய வாயினை யுடைய ஒரு புலியை ஊடுருவி இறக்கப் பண்ணித், துளையுள்ள கொம்புகளைத் தலையில் உடை ய ஒரு புள்ளிமான் கலையைக்கீழே உருளப்படுத்தி, உரல்போலுந் தலையினையுடைய காட்டுப்பன்றி யொன்று நிலத்தே விழுமாறு சென்று, பக்கத்தே உளதாகிய ஆழ்ந்த புற்றின்கட் கிடக்கும் உடும்பின் உடம்பிலே பட்டு நிற்கும் அத்துணை வலிய வில்லாண்மை வேட்டத்தில் பெற்றியை யுண்டாக்கி யிருந்தவனான ஒரி!' என்பது, இங்ஙனம் ஓரியென்னும் மலையரசன் ஓர் யானையை நோக்கி எய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/161&oldid=1579786" இலிருந்து மீள்விக்கப்பட்டது