உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

137

ஒரு

அம்பானது அவ்வியானையைக் கொன்று கீழே வீழ்த்திய தல்லாமலும், அது தான்சென்ற கடுவிசையினால் தான் சென்ற வழியின்கண் ணிருந்த ஒரு புலியின் திறந்த வாயினுள் நுழைந்து அதனை ஊடுருவிப்போய்ப் போகும் நெறியில் எதிர்ப்பட்ட ஒரு புள்ளிமானையும் உருட்டிவிட்டு, அதன் பின் ஒரு காட்டுப் பன்றியையுங் கீழ்விழச் செய்து, அவ்வளவிற் றன்விசை குறைதலின், அப்பன்றி வீழ்ந்த பக்கத்தேயுளதான புற்றின்கட் கிடந்த ஓர் உடும்பின் உடம்பிலேபட்டு நின்றது என, அவ்வம்பை ஏவிய அவனது விற்றொழில் வல்லமை யினையும், அதனைப் புலப்படக் காட்டும் அவ்வம்பினது விசையினையும் ஆசிரியர் வன்பரணர் நன்கெடுத்துக்காட்டினார். இதன்கண் இயற்கைக்கு மாறாகக் கருதற்பாலது ஏதுமேயில்லை. ஏவப்பட்ட மிகக் கூரிய அம்பு, ஏவியவனது பேராற்றலாற் கடுவிசையிற்சென்று ஒர் யானையை யூடுருவிப்போய்ப், பின் அவ்வியானையை நோக்கித் திறந்த வாயுடன் வந்த ஒரு புலியின் வாயினுள்ளே நுழைந்து அப் புலியினையுங் கீண்டுசென்று, அவ் வளவிற் றனது விரைவு சிறிது சிறிது குறைதலின் எதிர்ப்பட்ட ஒரு புள்ளிமானைக் கீழே உருளச்செய்து, அதன்பின் ஒரு காட்டுப் பன்றியைக் கீழ்விழமோதி, கடைசியாக அதன் பக்கத்தேயிருந்த ஒரு புற்றினுள்ளே நுழைந்து அங்கே கிடந்த ஓருடும்பின்மேற் றைத்து நின்றுபோதல் நிகழக் கூடியதேயாம்.

மற்றுப், பிற்காலத்துப் புலவரான கம்பர் அங்ஙனமே இராமனது விற்றொழிலாண்மையினைப் புலப்படத்துதற்குப் பாடிய இரண்டு செய்யுட்களையும் அற்றின் பொய்ம்மை யினையும் ஈண்டெடுத்துக் காட்டுதும்:

66

66

அலையுருவக் கடலுருவத்து ஆண்டகைதன் நீண்டுயர்ந்த நிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கு ஐயா! உலையுருவக் கனல் உமிழ்கண் தாடகைதன் உரம்உருவி மலையுருவி மரம் உருவி மண்உருவிற்று ஒருவாளி”

(பால, குலமுறை 26)

“ஏழு மாமரம் உருவிக்கீழ் உலகமென்று இசைக்கும் ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடன் அடுத்து இயன்ற ஏழுஇ லாமையின் மீன்டதுஅவ் விராகவன் வாளி”

(கிட்கிந், மரா, 138)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/162&oldid=1579787" இலிருந்து மீள்விக்கப்பட்டது