உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் 10

இவ்விரண்டனுள் முதற்செய்யுள் இராமனது ல்லாண்மையினை அவனை யுடனழைத்துச்சென்ற விசுவாமித்திரர் சனக மன்னனுக்கு எடுத்துரைக்கும் நிலையில் வைத்துக் கம்பராற் பாடப்பட்டிருக்கின்றது. அதன்பொருள் வருமாறு:

அலைகளையே தனக்கு உருவமாய்க்கொண்ட கடலைப் போலும் நீலநிறத்தினும் ஆண்மைக் குணத்தினனுமான இராமனுடைய நீண்டு நிமிர்ந்த நிலையினையே வடிவாக வுடைய தோள்களின் வலிமையை நீ ஊடுருவப் பார்த்தல் வேண்டும் ஐயனே! கொல்லனது உலைக்களத்திலே செக்கச் சிவந்து தோன்றுங் கனலையொப்பத் தீயைக் கக்குங் கண்களை யுடைய தாடகையென்னும் அரக்கியின் மார்பைத் துளைத்துச் சென்று, அதன்மேலும் மலையினையுந் துளைத்துப்போய், அதனாலுஞ் தன்விசை அடங்காமையின் மரத்தினையும் நிலத்தினையுந் துளைத்து ஏகிப், பின்னும் அது குறையாமையின் துளைத்தோடியது அவன் ஏவிய ஒருகணை.'

இப்பொருளைச்

சிறிதறிவுடையாரும்

உற்று

நோக்குவராயின், இஃது எத்துணைப் பொய்ம்மை நிறைந்த தாயிருக்கின்ற தென்பதனை யுணர்ந்து அதன்கண் அருவருப்பு எய்துவர். இராமன் ஏவிய ஓர் அம்பு தாடகை தன்மார்பைத் துளைத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அஃது அதன்பின் ஒரு மலையினைத் துளைத்துச் சென்ற தென்றதும், அதன் பின்னும் ஒரு மரத்தையோ பல மரங்களையோ துளைத்துப்போய தன்றதும், அதனானும் அதன் விரைவு குன்றாமல் இந் நிலத்தையே ஊடுருவி ஏகிய தென்றதும் இயற்கை நிகழ்ச்சியிற் காணப்படாத, கருதுதற்குங் கூடாத பெரும் பொய்யா யிருக்கின்றவல்லவோ! இருப்புக் கோலிற் செய்த ஒருகணை மலையைத் துளைத்துச் செல்லுதல் கூடுமோ! அதனைத் துளைத்தபின்னுந் தன் விரைவுங் கூர்மையும் மழுங்காமல் துளைத்துப், பின்னர் இந் நிலவுலகத்தையுந் துளைத்து அப்பாற் போகியதென்றது எத்துணைப் பெரும் புளுகாயிருக்கின்றது! இதனை நன்குணர்ந்து பார்மின்கள் அறிவுடையீர்! ஒருவனது வலிவை, ஒரு பொருணிகழ்ச்சியைச் சிறப்பிக்க ‘உயர்வுநவிற்சி’ சொல்லுங்கால் இங்ஙனம் இயற்கைக்கு முழு மாறுபாடுண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/163&oldid=1579788" இலிருந்து மீள்விக்கப்பட்டது