உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

139

டாகச் சொல்லுவது நல்லிசைப் புலமையாகுமா? கூர்ந்து பாருங்கள்!

மற்று, மேலெடுத்துக் காட்டிய பழந்தமிழாசிரியரான வன்பரணர் ஓரியினது வில்லாண்மையை வியந்து பாடிய அரிய செய்யுளிற் காணப்படும் ‘உயர்வு நவிற்சி' உலக இயற்கைக்கு எத்துணைப் பொருத்தமுள்ளதாய் விளங்கி நமக்குத் தேருந் தாறும் ஆராமகிழ்ச்சியினைத் தருகின்றதோ, அத்துணைக்கு இயற்கையொடு பொருந்துவதிலதாய்க் கம்பர் கூறும் இவ் வுயர்வுநவிற்சி நினைக்குந்தொறும் நமக்குப் பேரா வெறுப்பினையே விளைக்கின்றது!

இன்னும்; ஆசிரியர் வன்பரணரது செய்யுளில் மற்றுஞ் சில நுட்பங்களுந் தோற்றங்களும் ஓவியத்தில் வரைந்து காட்டினாலென நமதுளக் கண்ணெதிரே தோன்றி நம்மை இன்புறுத்துதலும் அறியற்பாற்று. ஓரிமன்னன் ஒரு வேழத்தை நோக்கியெய்த கடுங்கணை அவ் வேழத்தை ஊடுருவிப்போய், அதனைக் கொல்லுதற்கு அங்காந்தவாயுடன் வந்த ஒரு புலியையுங் கொன்ற நிகழ்ச்சியும்; அதன்பின் துளையுள்ள கொம்புகளையுடைய புள்ளிமான் ஒன்றையும் உருட்டி, அதன்பின் உரல்போலுந் தலையினையுடைய ஒரு

காட்டுப்பன்றியையும் வீழ்த்திய நிகழ்ச்சியுங் கடைசியாக அப் பன்றியின் பக்கத்தே ஒரு புற்றினுள்ளே அடங்கிக்கிடந்த ஓர் உடும்பின் உடம்பிற்சென்று தைத்து அவ் வளவில் நின்றுபோன நிகழ்ச்சியும்; இயற்கையில் உள்ளவைகளை உள்ளவாறே கைவல்லான் ஒருவன் வரைந்து காட்டும் ஓவியங்கள்போல் நம் கண்ணெதிரே தோன்றுகின்றமயுங் காண்மின்கள்! இத்தகைய இயற்கைத்தோற்றவனப்பு மேற்காட்டிய கம்பரது செய்யுளிற் சிறிதும் இல்லாமையும் நோக்குமின்கள்!

இனி, இராமன் ஏழு மராமரங்களைத் துளைத்தற்கு ஏவிய ஓர் அம்பு அவைதம்மைத் துளைத்துச் சென்றதாகக் கம்பர் கூறும் இரண்டாவது செய்யுட்பொருள் வருமாறு :

அவ்விராமன் தனது வில்லினின்றுங் தொடுத்துவிட்ட ஒரு கணையானது ஏழு பெரிய மராமரங்களையுந் துளைத்துச் சிறிதுங்

சென்று, அதன் பின்னுந் தனது கடுவிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/164&oldid=1579789" இலிருந்து மீள்விக்கப்பட்டது