உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் 10

குறையாமையின், கீழுலகம் என்று சொல்லப்படும் ஏழினையும் நடுவே புகுந்து துளைத்துப்போய்ப், பின் அக் கீழ் ஏழ் உலகங்களை உடன் அடுத்துத் தொடர்பாக உள்ள வேறு ஏழ் உலகங்கள் இல்லாமையினாலே திரும்பிவந்தது.

என்னும் இப்பொருளை நோக்குங்காற், கம்பர் மேலெடுத்துக் காட்டிய முதற் செய்யுளிற் புளுகியதினும் பன்மடங்கு மிகுதியாக இச் செய்யுளிற் புளுகிவிட்டனரென்பது நன்கு புலப்படு கின்றதன்றோ? மராமரங்களேழனைத் துளைத்தற்கு ஏவிய ஒரு வாளி அம் மராமரங்கள் ஏழனையுந் துளைத்துச் சென்ற தல்லாமலுங் கீழ் ஏழ் உலகங்களையுந் துளைத்துப் போய்ப், பின்னர்த் துளைத்துச் செல்லுதற்கு ஏதும் இல்லாமையின் திரும்பி இராமனிடமே வந்து சேர்ந்த தென்பது உலகிலுள்ள புளுகுகட்கெல்லாம் முதற்பெரும் புளுகாய் முன் நிற்கின்றது. மேலே வன்பரணர் பாடிய செய்யுளில் ஓரிமன்னன் ஏவிய வாளி, யானை புலி மான் உடும்பு முதலான உயிர்களின் ஊன் உடம்பைத் துளைத்துச் சென் றடங்கியதென்று சொல்லப்பட்டதே யல்லாமல், மரத்தை மலையை நிலத்தைத் துளைத்துச் சென்றதெனச் சொல்லப்பட்டதில்லை. ஏனெனில் இரும்பிற் செய்த கூர்ங்கணை விலங்குகளைக் கொல்லுதற்பொருட்டும், மக்களைக் கொல்லுதற் பொருட்டும் அக் காலத்திற் செய்யப் பட்டனவே யல்லாமல் மரங்களை மலையை நிலத்தைத் துளைத்தற்காகச் செய்யப்பட்டன அல்ல. ஆதலால், அவை மெல்லிய தசையுள்ள யானை புலி மான் முதலான உயிர்களின் உடம்பைத் துளைத்துச்சென்றன வன்பதுதான் பொருத்தமாகுமே யல்லாமல், அவை மரத்தை மலையை நிலத்தைத் துளைத்துச் சென்றனவெனக் கூறுதல் ஒரு சிறிதும் பொருத்தமுடையதாகாது; பொருத்தமுடைத்தாகாமையின்

அக் கூற்று உண்மையுடைத் தாகலுமில்லை. இல்லையாகவே, இராமன் மராமரங்கள் ஏழனை ஒரு கணையாற்றுளைத்து விட்ட டன ன னென்பது, பார்ப்பனர் இராமனது திறலை மிகுதிப் படுத்திக் காட்டுதற்குக் கட்டிவிட்ட ஒரு பொய்க்கதையே யாம். வான்மீகி இராமாயணத்திற் கட்டிவிடப்பட்ட இப் பொய்க் கதையினை உண்மையென நம்பிக் கம்பருந் தமிழில் இதனை எடுத்துப் பாடியது, பண்டைத் தமிழாசிரியரது மெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/165&oldid=1579790" இலிருந்து மீள்விக்கப்பட்டது