உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

141

வழக்கிலேயே பழகினார்க்கு உவர்ப்பினையும் வருத்தத் தினையுந் தாராதொழியுமோ?

பொய்க்கதையாகிய

டங்

இவ்வாறு கம்பர் நடவாத இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்தமையால், வடமொழிப் பொய்வழக்கிற் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்றக் கூறவேண்டும் களிலும் பொய்யாவனவே புனைந்து கூறி இழுக்கினார். இங்ஙனமே, கம்பருக்குப் பின்வந்த தமிழ்ப்புலவர்களெல்லாரும், பொதுமக்களை ஏமாற்றுதற்பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண்மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையுந் தலபுராணங்களையுமே பெரும்பாலுந் தமிழில் மொழிபெயர்த்துவைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய்வழக்கினை அடியோ டழித்துவிட்டார். இப் பிற்கால மொழிபெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங்களில் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவுவரையில் அவற்றின்கட் பொய்யாவனவே தொடுக்கப்பட்டிருத்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது.

அற்றேல், ஆங்கிலம் முதலான இஞ்ஞான்றை நாகரிக மொழிகளிற் பொய்யாகப் புனைந்த கட்டுக்கதைகளுங், கட்டுக் கதைகண்மேற் பாடப்பட்ட செய்யுள் நூல்களுஞ் சாலப் பெருகிவருதலும், அவற்றின் பயிற்சியைச் சிறந்த அறிவுடை யாரும் பாராட்டிப் பேசுதலும் என்னையெனின்; அப் பிறமொழிக் கட்டுக்கதைகளை ஆக்கிய புலவர்கள் அவற்றைக் கட்டுக்கதைகளென்றே கூறுதலோடு, அவற்றைப் பயில்வாரும் அவை பொய்யெனவே யுணர்ந்து அவையிற்றை அயர்வுதீர்ந்து ன்புறுதற் கருவியாகவே கைக்கொண்டு பயில்கின்றனர். அதனால் அந் நூல்களைப் பயிறலில் தீங்கேதும் விளைவ தில்லை. மற்றுப், பிற்காலத்துத் தமிழ்ப்புலவர்களோ வடமொழிக் கட்டுக்கதைகளை ஆராய்ந்து அவற்றுட் பொய்யாவன இவை மெய்யாவன இவையென்று தெளியும் பகுத்தறிவில்லாதவர் களாய்ப், பொய்யை மெய்யாக நம்பித் தாம் அறிவுமழுங்குவ தோடு, அப் பொய்யை மெய்யாகப் பிறரும் நம்புமாறு காட்டி அவரதறிவையும் மழுக்குவதால் இவரால் தமிழ்க்குந் தமிழ்மக்கட்கும் உண்டாங் கேடு அந்தோ! பெரிது! பெரிது!

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/166&oldid=1579791" இலிருந்து மீள்விக்கப்பட்டது