உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

3. நூற்பெருமை திருக்குறள் பொதுமறை

இனி, இங்ஙனம் இரண்டடிகளாற் குறள் வடிவாய் நின்றே இவ்வரிய பெரிய நூல் திருமாலைப் போல் எல்லாவுலகங் களையும் அளக்கும் பெருமைத் தாயின், இதன் பெருமை விரித்துரைக்க வல்லார் யார்? அறப்பொருள் தேற்றப் போந்த வடநூல் தமிழ்நூல் எல்லாவற்றையும் ஒருங்கெடுத்து ஒரு தட்டிலிட்டு இத்திருக்குறணூலை மற்றோர் தட்டில் வைத்து நிறுத்துப் பார்ப்பின் அப்போதும் இது பொறை மிகவுடைமை யால் கீழ்த்தாழுமன்றோ! வடமொழி மிருதி நூல்கள் எல்லாம் ஓரோவொரு சாதியார்க்கே உரிய கரும முறைகளை வகுத்துக் கூறி விதவா நிற்கும்; அவற்றின்கட் சொல்லப்பட்ட நெறிகளை மற்றைச் சாதியார் தழுவுதற்கு ஒருப்படார்; படாராகவே, ஏனைய பெரும் பாலார்க்கு அவை பயப்பது சிறிதுமின்றாமென்பதுபட்டு அந்நூற் பெருமைகளெல்லாஞ் சிற்றளவினவாய் ஒடுங்குமென்பது.மற்றுத் திருக்குறளென்னும் ச்செம்பொருணூலோ எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் இன்றியமையாது வேண்டப்படும் அறநெறிகளை நன்கு வகுத்துரைத்தலிற் பயன் பெரிதுடைத்தாய், அவர்தாம், “அறியாமை நோயான் வருந்தும் எம்முயிர்க்கிஃது ஓர் அருமருந்தாம்; எம்புன்றலைமேற் றிகழும் பொன்றா மணிவிளக்காம்; நன்பொருள் வேட்டுத் திரிதரும் எமக்கு ஓர் இன்புறும் அமிழ்தமாம்; சிற்றறிவினேமுக்கு உற்றநற் றுணையாம்; வேண்டுவார் வேண்டுந் திருவழங்கும் காண்டகு களஞ்சியமாம்” என்றுரைத்துப் பெரிது ஏத்தும் பெரும் பெருமைத்தாகலின் இதன் நன்மாட்சி அளப்பரிய விளக்க முடைத்தென்க. இது பற்றியன்றே கல்லாடர் என்னுஞ் சங்கப் புலவரும்,

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/191&oldid=1579816" இலிருந்து மீள்விக்கப்பட்டது