உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

திருக்குறள் ஆராய்ச்சி

“ஒன்றே பொருளென்னின் வேறென்ப வேறென்னின் அன்றென்ப வாறு சமயத்தார்-நன்றென்ன எப்பா லவரு மியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி”

167

என்று கூறுவாராயினதூஉமென்க. இன்னும் இந்நாலுணர்ந்த பின்றை மற்றெந்நூலுங் கேட்டல் வேண்டாவென்பதுபற்றி, ஆயிரத்து முந்நூற்று முப்பத்தருங்குறளும், பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின், போயொருத்தர், வாய்க் கேட்க நூலுளவோ' என்று நத்தத்தனார் என்னுஞ் சங்கப் புலவரும் ஓதுவாராயினர். இன்னுமவர் கூறிய திறங்களெல்லாம் விரிப்பிற் பெருகும். சங்கப்புலவர் இல்லது புனைந்து கூறாது பட்டாங்கு கிளக்கும் ‘புலவுத் துறந்து பொய்யா நோன்பினர்' 'என்று பேராசிரியரு முரைத்தாராகலின், அவர் திருக்குறணூற் பெருமை உலகம் நன்கறியல் வேண்டித் தெளித்துரைத்த கட்டுரை மொழிகள் புனைந்துரைபோலுமென மயங்கற்க; அவையெல்லாம் உண்மை மொழிகளென்றே கடைப்பிடிக்க.

வடமொழி மிருதி நூலியல்பு

இனி, வடமொழியிற் போதாயணர், ஆபத்தம்பர், கௌதமர், வசிட்டர், மனு முதலாயினோர் எழுதிய மிருதி நூல்களோடு இது தன்னை ஒப்பவைத்து ஆராய்ந்து பார்க்குங்கால் இத்திருக்குறள் மாட்சி நன்கு விளங்கு மாகலின் தாலிபுலாநயம் பற்றி ஆண்டாண்டு ஒருசில அங்ஙனம் எடுத்துக்காட்டுதும். பிராமணன் ஒருவன் மற்றை யொரு பிராமணன் பொருளைக் கவர்ந்தானாயினும், அன்றி யவனைக் கொன்றானாயினும், தன் குருவின் மனைவியைப் பற்றினானாயினும், கள் அருந்தினானாயினும், அரசன் அவன் நெற்றியிற் காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டு அவனை ஊரை விட்டுத் துரத்தல் வேண்டும் எனவும், பிராமணரினுந் தாழ்ந்த சாதியான் ஒருவன் அக்குற்றங்களில் ஒன்றைப் பிராமணன் மாட்டுச் செய்வானாயின், அவனது உயிர் வாங்கி ஒறுத்தலோடு அவன் பொருளையுங் கொள்ளையிடுதல் வேண்டுமெனப் போதாயனாரால் ஒன்று குறிக்கப்பட்டது. பிராமணர் முதலான மூன்று சாதியாரில் ஒருவன் சூத்திரப் பெண் ஒருத்தியுடன் கூடுவனாயின் அவன் ஊரினின்றுந் துரத்தப்படுதல் வேண்டும்

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/192&oldid=1579817" இலிருந்து மீள்விக்கப்பட்டது