உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச

168

மறைமலையம் 10

3

என்றும், சூத்திரன் ஒருவன் ஏனை மூன்றுசாதிப் பெண்களுடன் கூடுவனாயின் அவனுயிரைப் போக்குதல் வேண்டும் என்றும் ஆபத்தம்பரால் ஒன்று குறிக்கப்பட்டது. இன்னுஞ் சூத்திரன் ஒருவன் தன்னின் மேற்குலத்தானை வசை கூறுவனாயின் அவன் நாவினை அறுத்தல் வேண்டுமெனவும், அவன் அவரோடு சமநிலையடைய விரும்பின் அவன் முதுகில் கசையாலடிக்க வேண்டுமெனவும் அவரால் மற்றொன்று குறிக்கப்பட்டது. சூத்திரன் ஒருவன் பிராமணர் ஓதும் வேதவுரைகளைக் கேட்பனாயின் அவன் காதில் ஈயத்தை உருக்கி உகுத்தல் வேண்டுமென்றும், அவன் அவற்றை மொழிந்திடுவனாயின் அவன் நாவை அரிதல் வேண்டுமென்றும், அவன் அவ்வேத வுரைகளை நினைவிலமைப்பனாயின் அவன் உடம்பை இரண்டு கூறாகப் பிளந்து கொல்லுதல் வேண்டுமென்றும் கௌதமரால் ஒரு கட்டளை இடப்பட்டது" மனுவென்பவராற் குறிக்கப் பட்டவை இன்னுங் கொடுமையாக இருக்கின்றன. பிராமணன் க்ஷத்திரியனை வைதானாயின் ஐம்பது பணம் இறை இறுத்தல் வேண்டும்; வைசியனையாயின் இருபத்தைந்து பணமும், சூத்திரனையாயின் பன்னிரண்டு பணமும் இறுத்தல் வேண்டும்; சூத்திரன் பிராமணனைப் புறம்பழித்தானேல் அவன் நாவை அறுப்பதுடன் பத்தங்குல நிகளமுடைய இருப்பாணியைப் பழுக்கக்காய்ச்சி அவன் வாயினுள் நுழைப்பித்தல் வேண்டும். இன்னுந் தாழ்ந்த சாதியிற் பிறந்தவன் தன் மேற்குலத் தோனுக்கு எந்த உறுப்பினால் தீங்கிழைக்கின்றானோ அந்த உறுப்பை வெட்டியெறிதல் வேண்டும் என்பன பிறவுமாம். இவ்வாறே வட மொழி மிருதிநூல் எழுதின ஆரியர் தம்மின் வேறான மற்றைச் சாதியர்களை L யெல்லாம் நிரம்பக் கொடுமையாக நடத்துவதற்கு வேண்டுவனவெல்லாம் தாம் வேண்டியவாறே எழுதி வைத்தனர். இவர் எழுதிய இந் நூல்களைத் தரும சாத்திரங்கள் என்று உரைப்பின் அறக்கடவுள் நாணித் தலைகவிழு மென்பது சொல்லவும் வேண்டுமோ! நடுநிலை திறம்பாது முறைசெய்யும் வேந்தர் எவரும் இவ்வதரும சாத்திரங்களை மேற்கோளாகக் கொண்டு முறை செய்ய ஒருப்படுவரோ? அறிவுடையீர் கூறுமின்!

திருக்குறளின் அறவுரைச் சிறப்பு

5

இறைவனாற் படைக்கப்பட்ட ஆறறிவுடைய மக்கட் ெ டாகுதியில் எவர் பெரியர்? எவர் சிறியர்? பிறவுயிர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/193&oldid=1579818" இலிருந்து மீள்விக்கப்பட்டது