உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

169

வருத்துதன் முதலான தீக்குணமுடையோரே சிறியரெனவும், எல்லா வுயிர்கண்மாட்டும் அருள்கனிந்து அவற்றை

அன்பாய்ப் பாதுகாப்பாரே பெரியரெனவும் அன்றே உலகம் உறுதியுரை கூறா நிற்கின்றது. இங்ஙனம் இவ்வுலகம் ஒருங்கு ங்கு ஒப்பிய உறுதியுரையினைத் தெரிந்து விளக்கிய சான்றோர் எம்பெருந்தகையாளரான தெய்வப் புலமைத் திருவள்ளுவரல்லரோ! அவர்,

“பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

என்று ஓதி,

وو

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்

(குறள் 972)

(குறள் 30)

என்னும் மெய்யுரையால் அந்தணர் என்னுஞ் சொல் உயிர் கண்மாட்டு உண்மையருள் ஒழுக்கமுடையார் மேற்றன்றி ஏனையோர்மேற் செல்லாதென்பது நன்கு வலியுறுத்தினார். ஒருவற்கு உயர்ச்சி பிறப்பினால் வருவதன்று; அஃதவன் ஒழுக்கத் தினாலேயே வரற்பாலதாம். ஒழுக்கமில்லா வழிப் பிறப்புரிமை பற்றி உயர்வு கூறுதல் ஒரு சிறிதும் பயன்படாதென்பது விளக்கவன்றே ஆசிரியர், “இல்லை ஒழுக்கமில்லான்கணுயர்வு' என்று கட்டளை தருவராயினர். இங்ஙனம் விழுப்பந்தருதல் வல்ல ஒழுக்கத்தில் உண்மையின்மைபற்றி உயர்த்தலும் இழித்தலும் வேண்டப் படுவதாகவும், இந்நடுநிலைவழுவி வடமொழி மிருதி நூலார் பிறப்புரிமை பற்றி ஒறுத்தல் செயற்பாற்று என்றவுரை அறிவுடையார் வருந்துதற்கேதுவாங் கொடுமையுடைத்தாதல் காண்க. இங்ஙனமே அவர் ஏனைச் சாதியார் மாட்டுள்ள பொருள்கவரற் பொருட்டு நீத்தார் வழிபாடு முதலிய செயல்கள் செயக் கட்டளையிட்டுப் பலப்பல விரித்தெழுதினார்; இவையெல்லாம் அகந் தூய்மையுடையார்க்கு ஒரு சிறிது மாகாமையால் அவை யறிவுடையாராற் கொள்ளற் பாலன வல்லவென்க. இவையெல்லாம் வெறும் போலிக்கடன் களாதல் தெரித்தற் பொருட்டன்றே ஆசிரியர்,

66

‘மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்

(குறள் 278)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/194&oldid=1579819" இலிருந்து மீள்விக்கப்பட்டது