உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் - 10

என்று அருளிச் செய்வாராயினர். இங்ஙனம் இவர்க்கு இறந் தார் பொருட்டுக் கொடுக்கும் பொருளெல்லாம் அறப் பொருட்டாக மாட்டா; தமக்கு இயன்றவற்றை அன்புடன் எல்லாவுயிர்க்கும் பகுத்துக் கொடுத்து அருள்வழங்கும் அருஞ்செயலே அறமென்று சிறப்பிக்கப்படும் என்று ஆசிரியர், “பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

99

(குறள் 322)

என்பதன்கண் ஓதுதல் காண்க. இன்னும் கல்வியென்பது ‘மக்கள்’ மனவழுக்கைக் கழுவி அவரறிவினை விரிதரச் செய்யுந் தெள்ள மிழ்தமாம்; இஃதவர் மனவறையிற் செறிந்த பேரிருளைத்துரந்து விளங்கும் நந்தாமணிவிளக்காம். இப்பெற்றித்தாகிய கல்வி வளம் பெறக் கிடைத்தோரே கண்ணுடையர், ஏனையோர் முகத்தே புண்ணிரண்டுடையர் என்பது புலப்படக்,

“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்”

(குறள் 393)

என ஆசிரியர் வற்புறுத்திக் கூறிக், கல்லார்க்குங் கற்றார்க்கும் உள்ள வேறுபாடு நன்கு புலப்பட,

66

"விலங்கொடு மக்க ளனையரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர்”

(குறள் 410)

என்றும் ஓதி யருளினார். இவற்றாற் கல்வியறி வென்பது எப்பாலார்க்கும் இன்றியமையாது வேண்டப்படும் உற்ற நற்றுணையேயாக, அது தன்னைப் பிராமணர்க்கு மாத்திரம் வரைந்து சொல்லி ஏனையோர்அது பெறமுயலினும் அவரை ஒறுத்து வருத்துக என்று கூறிய மிருதி நூல்கள் என்ன பயனுடையவாம்? கல்வியின் மாட்சியுணர்ந்த பாண்

வேந்தன்,

666 “உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலாற் றாயு மனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவருள்

டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/195&oldid=1579820" இலிருந்து மீள்விக்கப்பட்டது