உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பிற்

மேற்பா லொருவனு மவன்கட் படுமே"

என்றுங்,

7“கல்லா வொருவன் குலநலம் பேசுதல்

நெல்லினுட் பிறந்த பதரா கும்மே.'

وو

171

என்றுங் கூறிய அருமருந்தன்ன அறவுரைகளொடு மேற்கூறிய மிருதி நூல் உரைகளை ஒத்து நோக்குங்கால், அவை ஒளி முன் மறைந்த இருள்போலாதல் தெற்றென விளங்கும். இன்னும், நுண்ணறிவானும் மெய்ப்பொருளாராய்ச்சியானுஞ் சிறந்து விளங்கிய தமிழாசிரியர். வடமொழி வேதங்களையும் பிறவற்றையுங் கற்பின், அவற்றின் நுண்பொருளின்மை பற்றி நகையாடுவர் என்பதனை நன்குணர்ந்து போலும் அம்மிருதிநூல் இயற்றினார் அங்ஙனங் கூறினர். அவ்வடமொழி நூற்பெற்றி அறிதற் பொருட்டு ஒருசிலரன்றி மற்றைப் பெரும்பாலார் தமிழர் அவ்வட நூற்பயிற்சி செய்தல் வேண்டா வென்னுங் கருத்துடையோம். தமிழில் தொல்காப்பியம், திருக்குறளை யுள்ளிட்ட சங்க இலக்கியம், பன்னிரண்டு திருமுறைகள், பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள், திருவாய்மொழி முதலான அரிய பெரிய நூல்கட்கு ஒப்புமுயர்வுமுடைய நூல்கள் வடமொழியிற் காணப்படுவதின்மையின் இத்தமிழ்நூற் பயிற்சியே சாலவும் வாய்ப்புடைத்தாமென்பது கடைப்பிடிக்க. ஆகவே, அம்மிருதி நூலாரும் அவரோடொத்த பிறரும் அந்நூல்களைத் தம்மிற்றாமே வைத்து மகிழ்ந்து பாராட்டக் கடவராக. து கி கிட டக்க.

պ

இனி, ஒருதலைகோடும் மிருதிநூற் பொருள் போலாது தெய்வத் திருக்குறளாசிரியரான தோலாநாவின் மேலோர், மக்களெல்லார்க்கும் உறுதி தரும் பொருள் நாடி யுணர்த்தற்குத் திருவுளங்கொண்டு அருளிச் செய்தவற்றுள் ஒரு சிலவற்றின் மாட்சி ஈண்டு எடுத்துக்காட்டுவாம். ஒவ்வொரு சமயத்தாருந் தம்முட்டாமே முரணிக்கூறுந் தேவர் தம்மை வணங்குக வென்று உணர்த்தல் செய்யாது, அவர் தமக்கெல்லாம் ஒப்பமுடிந்த ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/196&oldid=1579821" இலிருந்து மீள்விக்கப்பட்டது