உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் 10

முழுமுதற் கடவுளை வணங்குகவெனப் பிறதேயங்களில் உள்ள சாதியாரெல்லாம் விரிந்த உணர்ச்சிப் பேறின்றி அநாகரிக முற்றுத் தோப்புகளில் மரங்களையும் வானிற்றோன்றும் கோள்கள் முதலியவற்றையும் வணங்கிக் கொண்டிருந்த இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தெய்வப் புலவர் நிலைத் திணை இயங்குதிணை யெனப்படு மெல்லா வுலகங்கட்கும் முதல்வனாய், அவற்றை நடைபெறுவித்தற்குரிய முற்றறிவும் முடிவி லாற்றலுமுடைய இறைவன் ஒருவனுண்டென்பதூஉம், அவனே யாவரானும் வழிபடற்பால னென்பதூஉம் நன்கு

விளக்கியருளினார்.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.”

(குறள் 28)

என்பதனால், முதல்வன் அருட்பேற்றிற்கு உரியரான துறவோர் தூய வுள்ளமும் தூய வொழுக்கமு முடையராய்த் தம்மைச் சார்ந்து வழிபடுவார்க்கு அறநெறி காட்டுதற் பொருட்டு எல்லாத் தேயங்களினும் ஆங்காங்கு உறைவரென்பதூஉம், அவர் பெருமை அவர் அருளிச் செய்யும் மந்திர மொழிகளால் நன்குணரப்படுமென்பதூஉம் வகுத்துக் கூறினார். அதனால் ஆரியர் தமக்குள்ளே மட்டுந்தான் துறவிகள் உளர், ஏனையோர் துறவொழுக்கம் பெறற்குத் தகுதியுடைய ரல்லரெனக் கூறும் மிருதி நூற்பொருள் மறுக்கப்பட்டமை காண்க. இறைவன் அருட் குறிப்பால் எல்லாத் தேயத்துள்ளார்க்கும் அறிவு தெருட்டல் வேண்டித் துறவோர் ஆங்காங்குப் போதருவ ரென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தமையின் திருவள்ளுவர் கருத்துப் பெரிதும் பொருத்தமாவதேயாமென்க. அறத்தின் உண்மை

இனி ஆசிரியர் மக்களுயிர்க்குறுதியாம் அறத்தினியல்பு உணர்த்துவான் புகுந்து 'அறமென்பது உள்ளத்தில் மாசின்றி நிலைபெறுதல்' எனவும், ‘அவ்வுள்ள மாசாவன அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல்' எனவுந் தெளிய எடுத்து ஓதி, ‘அருள்' எனப்படுஞ் சீவகாருணியம் இல்வழி அவ்வறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/197&oldid=1579822" இலிருந்து மீள்விக்கப்பட்டது