உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

173

எனைத்தானும் நிலைபெறாதென்பதூஉம் தெரித்தருளினார். கணக்கின்றிப் பொருட்செலவிட்டு வேட்குதும், பார்ப்பார்க்குப் பல ஆக்கள் கன்றொடுங் கொடுத்துக் குமரித் துறையாடுதும், கோயில்கள் புதுக்குதும், அறவைச் சோறளிக்குதும், தண்ணீர்ப் பந்தர் வைக்குதும், வழிச்செல்வோர்க்கு இளமரக்காவமைத்துக் குளந்தொடுதும் எனப் பலவகையான் ஆரவாரம் புரிந்து ஒழுகும் ஒழுகலாறு அறத்தினியற்கையன்று. பிறர் வளம்பெறுதல் கண்டு பொறாமை எய்தாது, பிறர்க்குரிய அறம்பொருள் மேல் விழைவுறாது, பிறர் தமக்குத் தீது இயற்றிய வழியும் அவர் மேல் வெகுண்டு தாமும் தீது செய்தலின்றி யவர்க்கு நலமே புரிந்து யார்மாட்டும் இன்சொற் சொல்லுதலையே கடமையாகக் கொண்டு ஒழுகும் விழுமிய ஒழுகலாறு ஒன்றுமே அறத்தின் உண்மையாம். இவை எங்ஙனம் உண்டாம் எனின், 'இறைவனாற் படைக்கப்பட்ட இவ்வுயிர்கள் எல்லாரும் எமக்கு மிக இனியராவன்றே என்றுட் கொண்டு, அவர் வருந்தக் கண்டுழி, 'ஐயோ! இவர் ஏன் இங்ஙனம் வருந்துகின்றனர்! இவர்க்கு யாது நேர்ந்தது! எமக்குப் பசி நேர்ந்த காலத்தில் நோய் உண்டாகின்றது; இவர்க்கும் அதுவேயோ? எமக்கு ஒருவகையால் துயரம் நேரிட்ட காலையில் எங்கண் கலுழ்கின்றது; இவர்க்கும் அதுவேயோ? யாம் துன்புறினும் இவர் வருந்தப்போறேம்” என்று, உள்ளுருகி

66

வெம்பி வெதும்பி அவர் துன்பந் துடைக்குமளவும்

வேறொன்றினுங் கருத்து ஊன்றாராய் இளகிய நெஞ்சத்தோடும் ஒழுகுவார்மாட்டு வைத்துக் கண்டு கொள்ளப் படுமாகலின், அருள் தோன்றுமுறை இங்ஙனம் என்று உணர்க. இது விளக்கியவன்றே ஆசிரியர், "அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம்” என்றும், “மன்னுயிரோம்பி யருளாள்வார்” என்றும் தெருளாதான் “மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரின், அருளாதான் செய்யுமறம்” என்றும் விதந்தருளியதூஉம் என்க. குறைந்த தரத்தின் நிகழ்வதனை அன்பு எனவும் மிகுந்த தரத்தின் நிகழ்வதனை அருள் எனவும் பெயரிட்டு இல்லறத்தாரை நோக்கிப் பகர்கின்ற காலையில் அன்புடைமையினை விதந்து வற்புறுத்தியும், துறவறத்தாரை நோக்கிப் புகல்கின்ற காலையில் அருளுடைமையினை விதந்து வற்புறுத்தியும் ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/198&oldid=1579823" இலிருந்து மீள்விக்கப்பட்டது