உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 அரு

❖ LDM MLDMWELD-10 மறைமலையம்

லையின் இன்றியமையா அறநெறியை நன்கு தெருட்டியருளினார். இருந்தவாற்றால் இத்தெய்வத் திருக்குறணூல் முழுதுங் கூறப்பட்ட அறத்தொகுதிகள்

தேனிறாலைச் சுற்றித் தேனீக்கள் மொய்த்துக்கொண்டு அதன்கட்டேனை உரிஞ்சி உயிர்வாழ்தல்போல, இவ்வருள் என்பதனைச் சூழ்ந்து நின்று நிலைபெறுகின்றமை காண்க. இன்னும் ஞாயிறு ஒன்றானே ஏனை வான் மீன்களும் பிறவும் விளக்கம் எய்துமாறுபோலத் திருவுறுகின்றன; பொன் ஞாணிற் கோத்த முழு மணிகள்போல இயைபு நனியுறுகின்றன.

இனி, ஆசிரியர் நினைப்பனவுஞ் சொல்வனவுஞ் செய்வனவும் எல்லாம் அருள்; அவரது அறிவின்றோற்றமே அருள்; அவர் காண்பனவுங் கேட்பனவும் எல்லாம் அருள். இங்ஙனம் எல்லாம் அருளுருவாய் காணவல்ல செந்நாப் போதார் அவ்வருட்டன்மையினை விளங்க விரித்து அறி வுறுக்குமாறுபோலப் பிறர் யாரும் அங்ஙனஞ் செய்திலர். அருளையின்றி உயிர்கள் பெறுஞ் செல்வம் பிறிதொன் றில்லை. அவ்வருள்வண்ணமயமாய் விளங்கப் பெறுதலே வீடுபேறு; அஃதொன்றான்மட்டுமே பிறவியறும். இவ்வாறு இதன் சிறப்பு முந்துறுத்து உணர்த்துகின்றாராகலின் சிரியர் அவ்வருணெறிக்கோர் உறுபெருந்தடையாய் உள்ள காலையை மிகவிலக்கி அறமறிவுறுத்தார். தன் உடம்பு கொழுமை பெறுதல் வேண்டிப் பிறிதொன்றன் உடம்பைச் சிதைத்து அதன் ஊனை உண்பானுக்கு அருள் நிகழுமென்றல் பொருந்தாவுரையாம்.

66

“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி நூனுண்பான், எங்ஙனம் ஆளும் அருள்”

(குறள் 251)

என்று ஆசிரியர், கொலை, நிகழ்வுழி அருள் நிகழாமையினை நன்கு வலியுறுத் தருளினார். தனக்கு என்றும் நீங்காத நிரயத்துன்பம் அதனான் வருவதாயினும், கொலை மறுத்த லினின்றும் ஒருவன் விலகற்பாலன் அல்லன். துறக்க நாட்டின் நுகர்ச்சியெல்லாம் எனக்கு ஒருங்கே வருவதாயினும் யான் கொல்லாமை யறத்தினின்றும் வழுவேன் என்பானுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/199&oldid=1579824" இலிருந்து மீள்விக்கப்பட்டது